பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் தவெக தலைவர் விஜய். இதில் இரண்டு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் விஜய்.
வேட்புமனுவின் போது விஜய் சொத்து மதிப்பை குறைத்து காட்டி முறைகேடு செய்திருக்கிறார் என்று பெரம்பூர் வாக்காளர் விக்னேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையில், பெரம்பூர் வேட்புமனுவில் தனக்கு 115.13 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியிருக்கும் விஜய், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 220.15 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கணக்கு காட்டி இருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, வேட்புமனுவில் விஜய் சொத்துக்கணக்கை குறைத்து காட்டி முறைகேடு செய்திருக்கிறார். வருமான வரித்துறை இதை விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேட்புமனுவில் நடந்த இந்த குளறுபடிக்கு என்ன காரணம்? எப்படி என்று பதைபதைப்பில் இருக்கிறது பனையூர் வட்டாரம்.



