என்னுடைய சிவாஜி என்ற பெயரை நானே மறந்துவிட்டேன் – ரஜினி
ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக வீடியோவில் பேசி இருக்கிறார் ரஜினி. அக்கல்லூரியில் 1975 -1979ல் படித்த மாணவர்கள் 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி அது. நேற்று நடந்த…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் கூட்டணிகள், தேர்தல் தயாரிப்புகள் மற்றும் சின்ன ஒதுக்கீடுகள் என அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) 2026 ஆம் ஆண்டு…
கடைசி நேரத்தில் என்ன நடந்தது? குன்னம் மாற்று முடிவை எடுத்தது ஏன்?
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்ததில் ஓபிஎஸ் அணியில் இணைந்தார் குன்னம் ராமச்சந்திரன். ஓபிஎஸ் ஒரு முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகினர். இதில் வைத்திலிங்கத்தை அடுத்து குன்னம் ராமச்சந்திரனும் விலகி சென்று…
15 லட்சம் ஆண்டுகள் மறைக்கப்பட்ட மனித வரலாறு !
இந்திய வரலாற்றை நாம் இதுவரை அறிந்த விதமே தவறானதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது கீழடி அகழாய்வு. அந்தக் கேள்வியை உறுதியாகவும் ஆதாரங்களோடும் முன்வைத்தவர் இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் (Amarnath Ramakrishnan). வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கும் கீழடி…
குன்னம் எடுத்த முடிவு – குழப்பத்தில் பன்னீர்
பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டதால் எடப்பாடி பழனிசாமியை ‘துரோகி’ என்று பன்னீர் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். தங்களை சேர்த்துக்கொள்ளாத துரோகி எடப்பாடி பழனிசாமியுடன் என்றைக்குமே நாம் சேரக்கூடாது என்று தொடர்ந்து சொல்லி வந்தவர் பன்னீர்…
தலையங்கம் : பா.ஜ.க. ஆலிங்கனத்தில் அ.தி.மு.க!
மகாபாரதக் கதையில் திருதராஷ்ட்ரன் ஆலிங்கனம் என்ற சொல் உண்டு. கௌரவர்களில் மூத்தவரான துரியோதனின் தம்பிகளின் ஒருவர் திருதராஷ்ட்ரன். அவருடைய இயல்பு, நண்பர் போல கட்டித் தழுவி, இறுக்கி நெரித்து அவர்கள் கதையை முடித்துவிடுவார். பாரதக் கதையில் அதற்குப் பெயர் திருதராஷ்ட்ர ஆலிங்கனம்.…
இன்றைய ராசிப்பலன் – 22.01.2026
இன்றைய பஞ்சாங்கம் 22-01-2026, தை 08, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.28 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. சதயம் நட்சத்திரம் பகல் 02.27 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பகல் 02.27 வரை பின்பு சித்தயோகம். மாத சதுர்த்தி விரதம்.…
Zomato நிறுவனத்தின் CEO திடீர் ராஜினாமா! – காரணம் என்ன?
சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் போன்ற பிரபல நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடர்னல் லிமிடெடின் (Eternal Ltd) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) தீபிந்தர் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவருடைய CEO பதவி பிப்ரவரி 1, 2026 முதல் நிறைவு…
குடித்துவிட்டு கும்மாளம் போடும் விஜய் – அதிமுக கடும் தாக்கு
தன்னுடைய சுய முயற்சியால் கலைத்துறையில் பயணித்து உயர்ந்த இடத்திற்கு வருகின்ற போது, தன் கதாபாத்திரங்களை பொறுத்தவரையிலும் பொதுமக்களுக்கு நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை வழங்கக்கூடிய கதாபாத்திரங்களில்தான் நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். குடித்துவிட்டு கும்மாளம் போடும் பாத்திரங்களில் அவர் நடித்தது கிடையாது. குடிப்பவனை திருத்துகின்ற கதாபாத்திரங்களில்தான்…
கேஏஎஸ் – ஆனந்த் இடையே என்ன தகராறு?
ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த, ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பலமுறை அமைச்சரவையில் அங்கம் வகித்த அனுபவம் உள்ளவருமான, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் அரசியல் செய்தவருமான கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி உடனான பிரச்சனையினால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தவெகவுக்கு சென்றார்.…




