• அரசியல்
    அரசியல்Show More
    vijay car
    விஜய் கைக்கு சென்ற பேப்பர் – கடுப்பில் ஆஸி பயணம்
    Apr 26, 2026 at 11:30 pm
    vijay campaign5
    விஜய் அதிக இடங்களில் பிரச்சாரம் செய்யாததற்கு இவர்தான் காரணமா?
    Apr 21, 2026 at 6:07 pm
    vijay eps
     பல்லாங்குழி பாப்பா – எடப்பாடியை கடுமையாக விமர்சித்த விஜய்
    Apr 21, 2026 at 5:50 pm
    ramadoss tears
     நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து… ராமதாஸ் கண்ணீர்
    Apr 21, 2026 at 3:00 pm
    ramadoss tears
    18 பாமக வேட்பாளர்களையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்
    Apr 21, 2026 at 2:29 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    2026-05-01
    Daily Horoscope
    இன்றையராசிப்பலன்-01.05.2026
    2026-05-01
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    2026-04-30
    daily horoscope April 30 2026,
    இன்றைய ராசிப்பலன்-30.04.2026
    2026-04-30
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
  • உலகம்
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Jaahnavi Kandula -Online Tamil News
    உலகம்
    அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு ரூ.262 கோடி இழப்பீடு !
    2026-02-12
    Pakistan Afghanistan border attack, 55 Pakistani soldiers killed,
    உலகம்
    ஆப்கானிஸ்தான் எல்லைத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-27
    Donald Trump-warning-Mexico -Colombia -Cuba-US Latin America politics-Trump foreign policy
    உலகம்
    வெனிசுலாவை தொடர்ந்து மெக்சிகோ, கொலம்பியா & கியூபா நாடுகளை குறிவைக்கும் ட்ரம்ப் !
    2026-01-05
    online-tamil-news-world-news-world-record
    உலகம்
    உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!
    2026-01-24
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: வார ராசிப்பலன் !
Share
31°C
Chennai
scattered clouds
31° _ 31°
75%
5 km/h
Mon
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
வார ராசிபலன்

வார ராசிப்பலன் !

Rohini R
Last updated: 2026-02-09 10:11 am
Rohini R Rohini R 52 Views
Share
Online Tamil News
SHARE

பிப்ரவரி 8 முதல் 14 வரை

இவ்வார சுபமுகூர்த்த நாட்கள்

08.02.2026 தை 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை 13.02.2026 மாசி 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

மேஷம்(அஸ்வினி,பரணி,கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராகு, புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் மேலோங்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உத்தரவுகளை வரும் நாட்களில் பெற முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பது மட்டுமில்லாமல் உயர்கல்விக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறையும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற கால பைரவரை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 8, 9.

சந்திராஷ்டமம் – 10-02-2026 அதிகாலை 01.11 மணி முதல் 12-02-2026 பகல் 01.42 மணி வரை.

ரிஷபம் (கிருத்திகை2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி,மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்-, புதன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் மிக மிகச் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலமாக வளமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி மன நிம்மதி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உங்களுக்கு உண்டு. தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடினமான பணியை கூட சுலபமாக செய்து முடிக்க கூடிய பலமானது வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, வெங்கடேச பெருமாளை தரிசிப்பதன் மூலமாக நன்மை கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 8, 9, 10, 11.

சந்திராஷ்டமம் – 12-02-2026 பகல் 01.42 மணி முதல் 14-02-2026 இரவு 12.42 மணி வரை.

மிதுனம்(மிருகசீரிடம்3,4-ஆம் பாதங்கள்,திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் வேலையாட்கள் உடைய ஒத்துழைப்பானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. தேவையற்ற வகையில் சிறு சிறு சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் எளிதில் சமாளித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற தூரப் பயணங்களை தவிர்க்க வேண்டிய நேரம் ஆகும். மாணவ மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வதன் மூலமாகவும் உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலமாகவும் அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 10, 11, 12, 13, 14.

கடகம்(புனர்பூசம் 4-ஆம் பாதம்,பூசம்,ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய், 8-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உடன் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. வயது மூத்தவர்களிடம் பேசுகின்ற பொழுது சற்று சிந்தித்துப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையற்ற பழிச் சொற்களை வரும் நாட்களில் எதிர்கொள்ள கூடிய ஒரு நிலை உண்டாகும். முடிந்தவரை உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, தேவையற்ற பயணங்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு ஞாபக மறதிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் படிப்பில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவதன் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 13, 14.

சிம்மம்(மகம்,பூரம்.உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசி அதிபதி சூரியன்- செவ்வாய் சேர்க்கைப் பெற்று ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும், 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் மூலமாக ஒரு சில ஆதாயத்தை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமண வயது அடைந்த ஆண், பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. தொழில் வியாபாரத்தில் எந்த எதிர்ப்பையும் சமாளித்து நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய நேரம் ஆகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகக்கூடிய நேரமாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிக்க கூடிய நேரம் ஆகும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடுவு காலம் பிறந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்கும். மாணவ மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை பெற துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது, ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்- 8, 9.

கன்னி (உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள்,அஸ்தம்,சித்திரை 1,2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், செவ்வாய், 7-ல் சனி சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ராகு 6-ல் இருப்பதாலும், குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத பண வரவுகள் சில கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் எதிர்கொள்ள கூடிய ஒரு பலம் உண்டாகும். பெண்கள் வழியில் தேவையில்லாத நிம்மதி குறைவு ஏற்படலாம். பிறரிடம் பேசுகின்ற போது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வு நேரம் குறைந்தாலும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் இருக்கும். மாணவ மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதை விட கல்விக்காக நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன் மூலமாக அனுகூலமான பலன்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்- 10, 11, 12.

துலாம்(சித்திரை 3,4-ஆம்n பாதங்கள்,சுவாதி,விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5-ல் புதன், சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்கள் மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் குறையக் கூடிய நேரம் ஆகும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்க முடியும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரு ம்நாட்கள்- 8, 9, 13, 14.

விருச்சிகம்(விசாகம் 4-ஆம் பாதம்,அனுஷம்,கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதாலும், 4-ம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. எதிர்பாராத அனுகூலங்களை பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பெரிய மனிதரின் உதவி கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டு. தொழில் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபத்தை நீங்கள் பெற முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் செல்லக்கூடிய யோகமும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய இடத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரம் ஆகும். மாணவ மாணவியர்கள் கடினமான விஷயத்தைக் கூட எளிதில் புரிந்து கொண்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்க முடியும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவதும், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 10, 11, 12.

தனுசு(மூலம்,பூராடம்,உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொது இடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று கூடுதலாக இருப்பதால் ஓய்வு நேரம் குறையும். மாணவ மாணவியர்கள் கவனச் சிதறல் காரணமாக படிப்பில் சிறப்பான மதிப்பெண்களை அடைய இடையூறுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்- 8, 9, 13, 14.

மகரம்(உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள்,திருவோணம்,அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)

ராசி அதிபதி சனி 3-ல் வலுவாக சஞ்சரிப்பதும், 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குருபகவான் தற்போது வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனசேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒரு சில நேரங்களில் உங்களது முன் கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய நேரம் ஆகும். சில விஷயங்களில் சாமர்த்தியமாக செயல்பட்டு அதிகப்படியான லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறரால் முடிக்க முடியாத ஒரு காரியத்தை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடித்து நல்ல நிலையினை அடைய முடியும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும். மாணவ மாணவியர்கள் முன்பை விட எதிலும் தற்போது சிறப்பாக செயல்பட்டு மற்றவருடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரம் ஆகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 8, 9, 10, 11.

கும்பம் (அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். குரு பகவான் தற்போது வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகக்கூடிய நேரம் ஆகும். உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் எல்லாம் தடைப்படக்கூடிய நேரம் ஆகும். ஒரு சிலருக்கு சட்டரீதியாக சில சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பனிச்சமை காரணமாக மன நிம்மதி குறைவு ஏற்படக்கூடிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள் மீது வீண் பழிகளை பழிச் சொற்களை சொல்வார்கள். மாணவ மாணவியர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படக்கூடிய சிறு சிறு பாதிப்புகள் காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாது. வரும் நாட்களில் அனுகூல பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, துர்க்கை அம்மனை வழிபடுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்- 10, 11, 12, 13, 14.

மீனம்(பூரட்டாதி 4-ஆம் பாதம்,உத்திரட்டாதி,ரேவதி)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை வரும் நாட்களில் பெறுவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய மன குழப்பங்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சிறப்பான லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிகள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க கூடிய வாய்ப்புகளும் தற்போது இருக்கிறது. குடும்பத்தில் தடைபட்டு வந்த சுப காரியங்கள் வரும் நாட்களில் கைகூடி மன நிம்மதி ஏற்படும். பூர்வீக சொத்து வகையில் ஒரு சில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ மாணவியர்கள் கல்வியியல் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெற முடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெற துர்கை அம்மனை தரிசிப்பது, ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நற்பலன் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்- 12, 13, 14.

சந்திராஷ்டமம் – 07-02-2026 பகல் 01.22 மணி முதல் 10-02-2026 அதிகாலை 01.11 மணி வரை.

Astrologer 2
TAGGED:auspicious days february 2026chandrashtama 2026rasi palan february 8 to 14 2026tamil astrology weekly predictiontamil horoscope all zodiac signstamil jothidam weeklytamil weekly horoscopethai maasi rasi palanweekly horoscope february 2026weekly rasi palan tamil
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Tamil horoscope 8 February 2026-Online Tamil news இன்றைய ராசிப்பலன்- 08.02.2026
Next Article Tamil horoscope 9 February 2026-Online Tamil News இன்றைய ராசிப்பலன் – 09.02.2026

உலகம்

US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Labor Day ,
தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
May 1, 2026 at 8:00 am
Daily Horoscope
இன்றையராசிப்பலன்-01.05.2026
May 1, 2026 at 7:05 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?