அதிமுகவில் பிளவுபட்ட சண்முகம் அணியினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் கட்சிக்கு எதிராக நடந்த சண்முகம் அணியினர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிசாமி வைத்த கோரிக்கையில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்தார் சபாநாயகர்.
இதனால் 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். 5 எம்.எல்.ஏக்கள் மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர்கள் தகுதி நீக்க பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

மீதமிருக்கும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் பழனிசாமியிடம் சமாதானம் பேசி ஒன்றாகிவிட்டனர். ‘’எங்களுக்குள் ஏற்பட்டது பிளவு அல்ல; கருத்து வேறுபாடுதான்’’என்று விளக்கமும் அளித்துவிட்டனர்.
இதில் சண்முகம் மட்டும் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்டால்தான் ஏற்றுக்கொள்வேன் என்று பழனிசாமி பிடிவாதமாக சொல்லிவிட்டதால் இருவரும் இணைய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சமாதானம் பேச வந்த வேலுமணி அணியினரிடமும் கோபத்துடன் பேசிவிட்டு வெளியேறிவிட்டார் சண்முகம்.
அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையவிருப்பதாக தகவல் கசிகிறது.



