படம் பார்த்தவர்கள் யாரும் லைலா பற்றி ஷேர் பண்ணாதீங்க என்று கேட்டுக் கொண்டிருந்தார் இயக்குநர் அமீர்.
கடந்த 23 வருடங்களுக்கு முன்பாக சூர்யா, நந்தா, த்ரிஷா, லைலா நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளிவந்தது மவுனம் பேசியதே திரைப்படம்.

இப்படன் ரிலீஸ் ஆகும் வரையிலும் படத்தில் லைலா நடித்திருக்கிறார் என்று விளம்பரப்படுத்தவே இல்லை அமீர். அந்த படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே லைலா வருவார். த்ரிஷாதான் நாயகி என்று நினைத்தால் அவர் நந்தாவுக்கு ஜோடி ஆகிவிடுவார். யாரும் எதிர்பார்த்திராத திருப்பமாக லைலா ஜோடி ஆவார்.

படம் ரிலீஸ் ஆன பின்னரும் கூட லைலா பற்றியும், க்ளைமாக்ஸ் பற்றியும் விமர்சனங்களில் சொல்லிவிட வேண்டாம். அது சஸ்பென்சை உடைத்துவிடும். எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும். அதற்காக க்ளைமாஸ் பற்றி ஷேர் பண்ணிக்காதீங்க என்று அப்போது கேட்டுக்கொண்டார் அமீர்.
காதலர் தினத்தை முன்னிட்டு மவுனம் பேசியதே படம் 23 ஆண்டுகளுக்கு பின் ரீ ரிலீஸ் ஆகிறது.



