• அரசியல்
    அரசியல்Show More
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
    thiruma vijay vannarasu
    என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்… ஆ .ராசா ஆவேசம்
    May 22, 2026 at 11:56 am
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    Air France Flight 447 crash
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    2026-05-22
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    Russia blocks WhatsApp-Online Tamil News
    உலகம்
    வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு ரஷ்யாவில் தடை!
    2026-02-12
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : சளைக்காத தொண்டர்கள்!
Share
40°C
Chennai
few clouds
40° _ 40°
45%
3 km/h
Sun
38 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : சளைக்காத தொண்டர்கள்!

Spark Web Desk
Last updated: 2025-09-18 12:14 pm
Spark Web Desk Spark Web Desk 57 Views
Share
karur dmk
SHARE

திராவிட மாதம் எனப்படும் செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழா நடத்துவது தி.மு.க.வின் வழக்கம். பெரியார்-அண்ணா- தி.மு.க. மூன்றும் பிறந்தது செப்டம்பர் மாதம்தான் என்பதாலும் திராவிட இயக்க ஆட்சியில் பல திட்டங்கள், சட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்பட்ட மாதம் என்பதாலும் செப்டம்பரை திராவிட மாதம் என்கின்றனர். அதில் முப்பெரும் விழா தனிச் சிறப்பு. செப்டம்பர் 15 முதல் 17 வரை மூன்று நாள் விழாவாக கலைஞர் மு.கருணாநிதி காலத்தில்  தொடங்கப்பட்டு, பின்னர் ஒரு நாள் விழாவாகக் கடைப்பிடிக்கப்பட்டு, தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்குவது முப்பெரும் விழாவின் முத்தாய்ப்பு.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் முப்பெரும் விழாவை சென்னைக்கு வெளியே நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடத்தப்பட்டது. இந்த 2025ல் கரூரில் நடத்தப்பட்டுள்ளது. தி.மு.கவின் முதல் பொதுக்கூட்டம் அண்ணா தலைமையில் 1949 செப்டம்பரில் ராபின்சன் பூங்காவில் நடைபெற்றபோது எப்படி மழைக்கிடையே நடந்ததோ, அதுபோலவே 75 ஆண்டுகள் கழித்து  2025 செப்டம்பரில் கரூரில் முப்பெரும் விழா மழைக்கிடையே நடந்து முடிந்துள்ளது. அப்போது போலவே இப்போதும் தி.மு.க தொண்டர்கள் மழையில் நனைந்தபடி கூட்டத்தில் பங்கேற்றதுதான் தி.மு.க.வின் வலிமை.

75 ஆண்டுகால வரலாற்றில் 25 ஆண்டுகள்தான் ஆட்சியில் இருந்துள்ளது தி.மு.க. அது பல நேரங்களில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், கட்டுக்கோப்பான இயக்கமாக இருப்பதற்கு காரணம் அதன் தொண்டர்கள். அண்ணா, கலைஞர், ஸ்டாலின் என தி.மு.க. மூன்று தலைமையைக் கண்டுள்ளது. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்ற அண்ணாவுடன் பழகிய அரசியல் தலைவர்கள் தி.மு.க.வின் பொதுச்செயலாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் கழகத் தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவதில் தி.மு.க. தொண்டர்கள் சளைத்தவர்களல்ல.

மிசா, தடா போன்ற கொடூர சட்டங்களின் கீழ் சிறைவாசம், சிறை நிரப்பும் போராட்டம், சட்ட எரிப்பு போராட்டம், நீதி கேட்டு நெடும்பயணம்  எனப் பலவகை போராட்டங்களை எதிர்கொண்டவர்கள். இன்றைய அரசியலில் சிறைக்குப் போக வேண்டிய அவசியமில்லை. காலையில் கைது செய்தால், மண்டபத்தில் கொண்டு போய்வைத்து,  மதியம் பிரியாணி கொடுத்து, மாலையில் போலீசார் அனுப்பி விடுவார்கள். அதற்கே பழைய-புதிய கட்சியினர் தெறித்து ஓடும் நிலையில், தி.மு.க தொண்டர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுங்கட்சியினர் என்பதை மறந்து எதிர்க்கட்சியினர் போல இடைவிடாமல் களச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க வெற்றிபெற்றே ஆகவேண்டும் என உயிரைக் கொடுத்து உழைத்தவர்கள் தொண்டர்கள். அவர்கள் விரும்பியபடியே, தி.மு.க. அரசு ஆறாவது முறையாக ஆட்சியமைத்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்கிற இலக்கை நிர்ணயித்தது தி.மு.க .தலைமை. இதெல்லாம் நடக்குமா என்று பலரும் யோசித்த நிலையில், என் தொகுதியில், என் வார்டில், என் பூத்தில் தி.மு.க.கூட்டணியை ஜெயிக்க வைப்பேன் என தொண்டர்கள் சளைக்காமல் செயல்பட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக சொன்னபடி 40க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

அண்மையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற செயல்திட்டத்தின்படி, வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து அவர்களை தி.மு.கவுக்கு ஆதரவான வாக்காளர்களாக உறுதி செய்யும் பெரும்பணியை தமிழ்நாட்டில் உள்ள 68ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில் தி.மு.க. தொண்டர்கள் மேற்கொண்டனர். இதற்கென மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலி வடிவமைக்கப்பட்டு, அதில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகள் கழித்து, ஆளுங்கட்சி வீடுவீடாக செல்வது என்பது ரிஸ்க்கான டாஸ்க். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களால் கிடைத்துள்ள பயன்கள்தான், மக்களிடம் கட்சியினரை எளிதாகவும் எதிர்ப்பின்றியும் கொண்டு சென்றது.

இப்போது அடுத்தகட்டமாக பூத்கமிட்டிகள், வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கவனம் செலுத்துதல் என தி.மு.க தலைமை 2026 தேர்தலுக்கான பணிகளைத் தொண்டர்களிடம் ஒப்படைத்துள்ளது. தொண்டர்கள் உழைப்பதற்குத் தயங்குவதில்லை. அதே நேரத்தில் அவர்களுக்கென்று தலைமையிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அவை நிறைவேறுதில் மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர் அளவில் குறுக்கீடுகள் உள்ளன. தேர்தலுக்கு முன்பு தலைமை சரிசெய்யயும் என்பதுதான் கரூரில் கொட்டும் மழையில் தலைவருக்காக நின்ற தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கை.

TAGGED:mk stalinmkstalintamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article priyankaa mohan தனியார் நிறுவனத்தின் சதி! பிரியங்கா மோகன் வருத்தம்
Next Article Kollywood Updates and Tamil Nadu News: The Growing Reach of Tamil Online News

உலகம்

Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
Samsung Electronics,
48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
உலகம் May 21, 2026 at 3:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kovai sulur
கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
May 23, 2026 at 4:37 pm
sulur3
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
May 23, 2026 at 1:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?