• அரசியல்
    அரசியல்Show More
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    Jun 23, 2026 at 5:57 pm
    shanmugam
    நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
    Jun 23, 2026 at 2:59 pm
    rajini video
    ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
    Jun 22, 2026 at 2:15 pm
    jayaalalithaa poongundran
    அந்த ஜால்ராக்கள் கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணம்- ஜெ., உதவியாளர் குற்றச்சாட்டு
    Jun 22, 2026 at 12:34 pm
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    tn
    14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்
    2026-06-22
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    2026-06-24
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    dharman rajini
    தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்
    2026-06-24
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    2026-06-23
  • இந்தியா
    இந்தியாShow More
    teligram
    தடை நீக்கம் – மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டெலிகிராம்
    Jun 23, 2026 at 5:11 pm
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Egypt, children online safety, Online tamil news
    உலகம்
    சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு: சமூக ஊடகங்களுக்கு எகிப்து கடும் கட்டுப்பாடுகள் !
    2026-01-27
    Gaddafi son killed -Online Tamil News
    உலகம்
    லிபியாவில் மர்ம துப்பாக்கிச் சூடு – கடாபியின் மகன் உயிரிழப்பு !
    2026-02-04
    Vladimir Putin congratulates Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா காமேனி: ஆதரவுக்கரம் நீட்டும் ரஷ்யா!
    2026-03-09
    Netflix,Warner Bros,7 -lakh- 40 -thousand -crore- rupees-Company -$82.7 billion
    உலகம்
    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியது நெட்ஃப்ளிக்ஸ்
    2025-12-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : மனிதம் மரணித்த நிலம்
Share
31°C
Chennai
overcast clouds
31° _ 31°
60%
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : மனிதம் மரணித்த நிலம்

Spark Web Desk
Last updated: 2025-09-19 10:00 am
Spark Web Desk Spark Web Desk 144 Views
Share
gaza
SHARE

மரண ஓலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது பாலஸ்தீன பகுதியான காசாவில். அந்த நகரத்தின் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகளாக சரிந்து, மண் மேடுகளாக குவிந்துள்ளன. அதற்குள் புதைந்திருப்பது மனித உடல்கள் மட்டுமல்ல, மனிதமும்தான். இஸ்ரேல் நாட்டின் கொடூர தாக்குதல் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் இந்தக் கொடூரம்?

உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதர்கள், ஜெர்மனியில் ஹிட்லரின் கொடூர வதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்டு, நச்சுவாயு செலுத்தி கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் படை ஹிட்லர்-முசோலினி சர்வாதிகாரப் படையை வீழ்த்தியது. அந்தப் போரில் நேச நாடுகளின் சார்பில் நின்ற சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் அதன்பின் உலக வல்லரசுகளாயின. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் யூத இன மக்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்காக 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடுதான் இஸ்ரேல்.

வல்லரசு அமெரிக்காவின் ஆதரவுடன் உருவான இஸ்ரேலின் எல்லைப் பகுதி குறித்து அப்போது முதலே சர்ச்சைகள் நீடிக்கின்றன. காரணம், பாலஸ்தீனப் பகுதிகள் இஸ்ரேல் நாட்டின் எல்லைக்குள் வந்தன. குறிப்பாக ஜெருசலம், காசா, மேற்குகரை போன்ற பகுதிகள் சர்ச்சைப் பகுதிகளாயின. இஸ்லாமியர்கள் வாழும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வரலாற்று ரீதியாக முன்வைத்து ஆயுதப் போராட்டங்கள் நடந்தன. யாசர் அராஃபத் தலைமையிலான எழுச்சி மிக்க போராட்டத்திற்கு இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவு தந்ததுடன், ஐ.நா. அவையில் யாசர் அராஃபத் தனது தாயகத்தின் நியாயங்களுக்காக முழங்கினார். அவருக்குப் பிறகு, ஹமாஸ் இயக்கத்தினர் ஆயுதத் தாக்குதலை நடத்தின. இதற்கு ஆதரவும் எதிர்ப்புமாக பல நாடுகள் நின்றன.

பாலஸ்தீனம் தனது விடுதலை கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில், இஸ்ரேல் திமிருடன் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. 2023ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல், எப்போது இந்த சந்தர்ப்பம் வரும் எனக் காத்திருந்த இஸ்ரேலுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேலில் தாக்குதல் ஓர் இன அழிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. போர் நியதிகள் எதுவுமற்ற தாக்குதல்கள் தொடர்கின்றன. பாலஸ்தீனத்தையும் ஹமாஸ் அமைப்பையும் ஆதரிப்பதாக குற்றம்சாட்டி லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. ஈராக் மீது தாக்குதல் நடத்தி, பதில் தாக்குதலுக்குள்ளானது. கத்தார், சிரியா, துனிசியா எனப் பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது.

காசா பகுதி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் விளைவாக அங்கே உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், சிறுவர்கள் பட்டினியால் சாகக்கூடிய நிலை உருவாகி, பல உயிர்கள் பறிபோயுள்ளன. போரில் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் படைகள் குண்டு வீசுகின்றன. செஞ்சிலுவை சங்கம் போன்ற போர் நிவாரண அமைப்புகளால் உணவு வழங்கப்படும் இடங்கள் மீதும் குண்டு வீசி பலரைக் கொலை செய்துள்ளது இஸ்ரேல். உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் மனிதநேயமற்ற தாக்குதலைத் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. ஒரு காலத்தில் பாலஸ்தீனத்தின் தோழனாக இருந்த இந்தியா, பா.ஜக.. ஆட்சி அமைந்தபிறகு இஸ்ரேலிடம் நட்புகாட்டியது. அதற்கு காரணம், பா.ஜ.க.வின் முஸ்லிம் வெறுப்பு அரசியல்தான். கத்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் மென்மையாகக் கண்டித்து தன் விசுவாசத்தைக் காட்டியிருந்தார்.

Palestinians wait to receive food from a charity kitchen, amid a hunger crisis, in Gaza City, July 28, 2025. REUTERS/Khamis Al-Rifi
ஐ.நா. ஆணையம் நடத்திய விசாரணையில் இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை என்பது உறுதியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு பெரும் பலமாக உள்ள அமெரிக்காவின்ராணுவத்தில் உள்ளவர்களே, “இந்தப் போரை நிறுத்துங்கள். இனப்படுகொலையைத் தடுத்திடுங்கள்” என்று குரல் கொடுத்திருப்பதும், அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் இஸ்ரேலின் போக்கை உலக அரங்கில் அம்பலப்படுத்தி வருகின்றன.

80 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்லரிடமிருந்து யூத இனத்தைப் பாதுகாக்க உலக நாடுகள் ஓரணியில் நின்றன. இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கித் தந்தன. இன்று அதே இஸ்ரேலிடமிருந்து பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டிய தேவைக்கு உலகம் தள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தரும் ஆதரவுதான் இஸ்ரேலின் பலம்.

எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்பார்கள். மேலை நாடுகள் தங்கள் ஆதரவை விலக்கினால் இஸ்ரேல் அடங்கும். இனப்படுகொலை தடுக்கப்படும்.

TAGGED:GazaIsraeltamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Kollywood Updates and Tamil Nadu News: The Growing Reach of Tamil Online News
Next Article kpy bala actor மனிதாபிமானத்தின் மீது கல்லெறிவது ஏன்? என்ன நடந்தது?

உலகம்

Global oil supply restoration
சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
உலகம் Jun 18, 2026 at 6:29 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kamal rajini
படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
Jun 24, 2026 at 2:28 pm
rajni dharman speech
நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
Jun 24, 2026 at 1:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?