• அரசியல்
    அரசியல்Show More
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
    vijay election
     விஜய் வேட்புமனுவில் இருக்கும் மர்மங்கள் – பாயும் வழக்குகள்
    Apr 3, 2026 at 10:44 am
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Childhood cancer in India
    இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்: அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்கள்!
    2026-04-03
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    2026-04-03
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    2026-04-03
    Pakistan fuel prices ,
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
    Vladimir Putin congratulates Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா காமேனி: ஆதரவுக்கரம் நீட்டும் ரஷ்யா!
    2026-03-09
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran high tension-US citizens leave Iran-Online Tamil News
    உலகம்
    ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !
    2026-02-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம் : மரணத்தை சந்தேகப்படலாமா?
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Fri
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
online-tamil-news-ajit-pawar
தலையங்கம்

தலையங்கம் : மரணத்தை சந்தேகப்படலாமா?

Last updated: 2026-01-29 9:40 am
Spark Desk 63 Views
Share
SHARE

மகாராஷ்ட்ரா மாநில துணை முதல்வர் அஜித் பவார்(Ajit Pawar) விமான விபத்தில் இறந்து போனது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி பேதமின்றி பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மராட்டிய மாநில அரசியலில் தனித்துவமாக விளங்கிய சரத்பவாரின் உறவினரான அஜித்பவாரும் அந்த மாநில அரசியலில் மிக முக்கிய பங்கு வகித்தவர். பின்னர், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து தன் ஆதரவாளர்களுடன் பிரிந்து, பா.ஜ.க.வுடன் கூட்டணியில் சேர்ந்தவர். அந்தக் கூட்டணியிலும் துணை முதலமைச்சர் என்ற முக்கியத்துவத்தைப் பெற்றவர்.

எந்தப் பக்கம் சென்றாலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளக்கூடிய வல்லவரான அஜித்பவாருக்கு நேர்ந்த முடிவு என்பது எதிர்பாராதது. துன்பகரமானது. எந்த பாரமதி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அவர் 7 முறை வெற்றி பெற்ற அவர் அதே பாரமதி தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் மரணமடைந்தார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துயரம் மிகுந்த நேரத்தில், இந்த விபத்து குறித்த சர்ச்சையும் சந்தேகங்களும் அரசியல் வட்டாரத்தில் எதிரொலிக்கின்றன.

மேற்குவங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி(Mamata Banerjee) இது குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்திருக்கிறார். அஜித்பவார் பயணித்த தனி விமானம் விபத்துக்குள்ளானதில் சந்தேகம் இருப்பதாகவும், இது பற்றி முழுமையான புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் பார்வையாளர்கள் பலரும் இந்தக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். எந்த ஒரு விபத்தும் பல கோணங்களில் ஆராயப்பட வேண்டியதுதான். அஜித்பவார் பயணித்த விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்கிற தொழில்நுட்பக் காரணம் முதன்மையாக இருக்கும் அதேநிலையில், அரசியல் சூழல்களும் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளன.(Online Tamil News)

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவாருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் அஜித்பவார். கட்சித் தலைமையைத் தன்னிடம் சரத்பவார் ஒப்படைப்பார் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அவரும் அதையே விரும்பினார். அஜித்பவார் மீது ஊழல் புகார்கள் வெளிவந்தன. அவருக்கு எதிராக மராட்டிய மாநில பா.ஜ.க. வரிந்து கட்டி நின்றது. விசாரணைகளும் தொடங்கின. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவார் தன் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலேவை முன்னிலைப்படுத்த, தலைமைப் பதவியை எதிர்பார்த்திருந்த அஜித்பவார் அதிருப்தியடைந்தார். அதன் விளைவாக, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கொண்டாடி, தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி, பா.ஜ.க. கூட்டணி அரசில் பங்கு வகித்தார்.

எந்த அஜித்பவார் மீது பா.ஜ.க. கடும் ஊழல் குற்றச்சாட்டு சொன்னதோ, அதே அஜித்பவாரை தனது கூட்டணி ஆட்சியில் இணைத்துக்கொண்டு பதவி வழங்கியது. பா.ஜ.க. எனும் வாஷிங்மெஷினில் ஊழல் கறைகள் நீக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. ஆனால், பா.ஜ.க. தலைமை அதனைப் பொருட்படுத்தவில்லை. மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்ட நிலையில், சிவசேனா கட்சியை இரண்டாகப் பிளந்துவிட்ட நிலையில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசையும் செல்வாக்கு இழக்கச் செய்யும் உத்தியாக, தன்னால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அஜித்பவாரை தன் பக்கம் வைத்துக் கொண்டது பா.ஜ.க.

அண்மையில், அஜித்பவாரின் அரசியல் பார்வையில் மாற்றங்கள் தெரிய வந்தன. அவர் மீண்டும் சரத்பவாருடன் இணைந்து தேசியவாத காங்கிரசை ஒன்றாக்கி வலிமைப்படுத்தக்கூடும் என்கிற யூகங்கள் வெளிப்பட்டன. அஜித்பவாரும் இதை சூசகமாகத் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில், அவர் பயணித்த தனி விமானம் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், மம்தா பானர்ஜி போன்ற அரசியல் தலைவர்களால் வெளிப்படையான சந்தேகம் எழுப்பப்படுகிறது.

அரசியலில் ஏற்படும் திடீர் மரணங்கள், விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் ஆகியவை குறித்த சர்ச்சைகள் எழுவது புதிததல்ல. ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த போது, அது குறித்த சர்ச்சைகளும் சந்தேகங்களும் கிளம்பின. ராஜசேகர் ரெட்டி மரணத்திற்குப் பிறகு, ஆந்திரா மாநில அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்த நிலையில், அவர் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய காங்கிரஸ் அரசினாலேயே கைது செய்யப்பட, பின்னர் அவர் தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க, இப்போது அவர் எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளப்பட்டு, ஊழல் வழக்குகளை எதிர்கொள்கிறார்.

ஒரு விபத்தும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அரசியல் களத்தில் பலவித எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அஜித்பவார் பயணித்த விமானம் ஏன் விபத்திற்குள்ளானது என்ற சந்தேகம் எழுகிறது.

TAGGED:Ajit Pawar aircraft accidentAjit Pawar deathAjit Pawar NCP BJP politicsAjit Pawar news analysisAjit Pawar plane crashAjit Pawar political controversyIndian political plane crashMaharashtra Deputy CM deathMamta Banerjee statement Ajit Pawaronline tamil newssuspicious political deaths India
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Today Rasi Palan 29.01.2026-Online Tamil News இன்றைய ராசிப்பலன் – 29.01.2026
Next Article ops theni யாருடன் கூட்டணி? இடத்தை மாற்றிய ஓபிஎஸ்!

உலகம்

Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Childhood cancer in India
இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்: அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்கள்!
Apr 3, 2026 at 6:26 pm
vinoj p selvam annamalai sg surya
அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
Apr 3, 2026 at 4:55 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?