தர்ம யுத்தத்தின் போது அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொண்டு வந்த ஓபிஎஸ், எடப்பாடியுடன் இணைந்த பின்னர் அடையாறு சொந்த வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து வந்தார்.
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிலும் அடையாறும் வீட்டிலும் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தார்.

அதிமுக உரிமை மீட்புக்குழு தொடங்கிய பின்னர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தார்.
தேர்தல் நெருக்கத்திலும் கூட முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் ஆதரவாளர்கள் பலரும் வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர். ஆதரவாளர்கள் வட்டம் குறுகி விட்டது. இதனால் இப்போது புரசைவாக்கம் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தாமல், இருக்கும் ஆதரவாளர்களைக் கொண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வீட்டில் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
யாருடன் கூட்டணி? என்பது குறித்து இன்று அவர் முடிவெடுக்க உள்ளார்.



