ப்ளூம்பெர்க் (Bloomberg) சமீபத்தில் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை, இரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனியின் (Ayatollah Ali Khamenei) மகன் மோஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) வெளிநாடுகளில் ரகசியமாகச் சேர்த்துள்ள பல பில்லியன் டாலர் சொத்துக்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

வெளிநாடுகளில் சொகுசு வீடுகள்
விசாரணை செய்தியின் படி, மோஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) லண்டனில் பல கோடி மதிப்புள்ள வீடுகளை வைத்துள்ளார். அதேபோல், ஐரோப்பாவின் சில நாடுகளில் உயர்தர ஹோட்டல்கள் மற்றும் வணிக கட்டிடங்களிலும் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சொத்துக்கள் சாதாரண மனிதரால் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்தவை என குறிப்பிடுகின்றன.
நேரடியாக பெயரில் இல்லாத சொத்துக்கள்
இந்த சொத்துக்கள் அனைத்தும் மோஜ்தபா காமேனியின் பெயரில் நேரடியாக இல்லை. அதற்க்கு பதிலாக, “ஷெல் கம்பெனி” எனப்படும் போலி நிறுவனங்கள் மற்றும் நம்பகமான வணிகர்களின் பெயர்களில் இந்த சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உண்மையான உரிமையாளர் யார் என்பதை கண்டறிவது கடினமாகிறது.

பணம் எங்கிருந்து வந்தது?
இந்த அளவிலான செல்வம் எங்கிருந்து வந்தது என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. இரானின் எண்ணெய் வருமானம் மற்றும் அரசு தொடர்புடைய வர்த்தகங்களில் இருந்து பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அந்த பணம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு வங்கிகள் வழியாக முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இரானில் மக்கள் போராட்டம்
ஒருபுறம் இரானில் மக்கள் வேலை இல்லாமை, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், நாட்டின் முக்கிய அதிகாரிகளின் குடும்பங்கள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்வது மக்க மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவே அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு மேலும் தீவிரம் சேர்த்துள்ளது.(Online Tamil News)

அதிகாரப்பூர்வ மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மோஜ்தபா காமேனி அல்லது இரான் அரசு தரப்பில் இருந்து இதுவரை தெளிவான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. சில வணிகர்கள், தங்களுக்கு அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளனர்.



