பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் கடந்த கடந்த 30ம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
தனது பெயரிலும் தன் மனைவி சங்கீதா பெயரிலும், சகோதரி வித்யா அறக்கட்டளை பெயரிலும் உள்ள சொத்துக்கள் விபரங்களை அறிவித்துள்ளார்.

விஜய் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறார் என்கிற விபரங்களையும் அளித்திருக்கிறார். தாய், தந்தை, மகன், மகள், மனைவிக்கு செய்த செலவுகளையும் அவர்களுக்கு கடன் கொடுத்திருப்பதாக கணக்கு காட்டி இருக்கிறார் விஜய். சுனில் ராஜ் என்பவருக்கு ரூ.1,50,00,000ம், என்.ஆனந்துக்கு ரூ.3,00,00,000ம் , வி.ரவிச்சந்திரனுக்கு ரூ.5,00,00,000ம், ஏ.எல்.பி. ஆண்டானியஸ் பிரிட்டோவுக்கு ரூ.20,00,00,000ம், கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20,00,00,000ம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட்டுக்கு ரூ.94,00,000ம், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ரூ.3,02,71,931ம், தாய் ஷோபா சந்திரசேகருக்கு ரூ.8,71,2018ம், மனைவி சங்கீதாவுக்கு ரூ.12,60,53,615ம், மகன் ஜேசன் சஞ்சய்கு ரூ.8,78,479ம், மகள் திவ்யா சாசாவுக்கு ரூ.4,60,000ம், வித்யா சாரிடபுள் டிரஸ்டுக்கு ரூ.5,84,21,000ம், விஜய் வித்யாசிரம் பள்ளிக்கு ரூ.24,96,000ம் கடன் அளித்திருப்பதாக கணக்கு காட்டி இருக்கிறார் விஜய்.
இது மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. குடும்பத்தினருக்கு செலவுக்கு கொடுத்த பணத்தை கடன் கணக்கில் விஜய் கொண்டு வந்திருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, சொத்துக்கணக்கை குறைத்துக் காட்டி இருக்கிறார் விஜய் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

படூரில் இருக்கும் பள்ளிக்கட்டிடத்தின் சந்தை மதிப்பு பல கோடிகள் இருக்கும் நிலையில் மதிப்பை குறைத்து காட்டப்பட்டு இருக்கிறது. மயிலாப்பூரில் வாங்கி இருக்கும் பிளாட் ரூ.1கோடியே 35 லட்சமென்று காட்டி இருக்கிறார் விஜய். ஆனால் இதன் சந்தை மதிப்பு 45 கோடிக்கும் மேலிருக்கும் என்கிறார்கள்.
இது மட்டுமல்லாது விஜய்யின் வேட்புமனுவில் இன்னும் பல மர்மங்களும் புதைந்திருக்கின்றன என்கிறார்கள். இது தொடர்பாக சிலர் வழக்கு தொடர்ப்போவதாக முயன்று வருகின்றனர். தேர்தலுக்கு பிறகு இந்த சட்டச்சிக்கலை விஜய் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.



