சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்றக் கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என்று 17 அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் 47 எம்.எல்.ஏக்களில் 17 பேர் மட்டுமே எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் 30 எம்.எல்.ஏக்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் பக்கம் நிற்கிறார்கள்.

இதனால் மீண்டும் அதிமுக உடைகிறதா? என்கிற சதேகம் எழுந்திருக்கிறது. இதற்கு ஆர்.பி.உதயகுமார், ‘’அதிமுகவை உடைக்க முயற்சி நடக்கவில்லை’’ என்கிறார்.
காலையில் சட்டப்பேரவை வந்த சி.வி.சண்முகமோ, பதவியேற்காமல் வீடு திரும்பியவர் இன்று மாலையில் மீண்டும் வந்து தற்காலிக சபாநாயகர் அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது அதிமுக உடைகிறதா என்று கேட்டபோது, ‘’பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று சஸ்பென்ஸ் வைக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ’’அதிமுகவில் பிளவு என்பது தவறான செய்தி’’ என்கிறார்.
அதிமுகவில் என்னதான் நடக்கிறது?



