வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் வெட்டியாக இருப்போரை ‘கரப்பான்பூச்சி’ என்று விமர்சித்திருந்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி. இதனால் சிஜேபி எனும் காக்ரோச் ஜனதா கட்சி என்று ஒரு இயக்கத்தையே உருவாக்கி விட்டனர். போஸ்டன் பல்கலைக்கழக மாணவர் அபிஜீத் திப்கேதான் இந்த அமைப்பை விளையாட்டாக உருவாக்கினர்.

இந்த அமைப்புக்கு கூடிய ஆதரவை பார்த்து பலரும் வியப்பாக பேசப்பேச, ஒட்டுமொத்த இளைஞர்களையும் நான் அப்படி சொல்லவில்லை என்று விளக்கம் கொடுத்தார் நீதிபதி. ஆனாலும் இந்த அமைப்பு நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே சென்றது. இன்று இந்தியாவே இந்த அமைப்பை திரும்பி பார்க்கிறது.
கரப்பான் பூச்சி கட்சியின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று போராட்டம் வெடித்தது. நீட், சிபிஎஸி தேர்வு குளறுபடிக்கு எதிராக இந்த போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்திற்கு தலைமையேற்க அமைப்பின் நிறுவனர் அபிஜீதி தீப்கே இன்று இந்தியா வந்தார்.

ஆரம்பத்தில் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் எழுச்சியை கண்டு அடக்க நினைப்பது சரியாகாது என்று நினைத்து அனுமதி கொடுத்துவிட்டனர். ஆனாலும் பாதுகாப்பு பலமாக இருந்தது.

நேபாளத்தில் நடந்த புரட்சிக்கு வித்திடுமா? என்ற பரபரப்பு இருந்த நிலையில் சிஜேபி போராட்டம் அறப்போராட்டமாக அமைந்திருக்கிறது. ஆனாலும் அசம்பாவீதங்கள் நிகழாமல் தடுக்க போராட்ட பகுதியை அதிரடிப்படையினர் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 6 பேரை மட்டும் கைது செய்து பதற்றத்தை தணித்தனர்.



