’’அதிமுகவை பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை கிடையாது. அரசியல் நாகரீகம் என்று ஒன்று உண்டு. தான் தோன்றித்தனமாக பேசுகிறார் ஆதவ். இது போன்ற பேச்சை நிறுத்தாவிட்டால் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம். அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்களை வரவேற்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பல கட்சிகளுக்கு சென்றவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பற்றி பேச அருகதை கிடையாது’’ என்று ஆத்திரப்பட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என்று அதிமுகவினர் பலர் இன்று தவெகவில் இணைந்தனர். இது குறி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ’’எடப்பாடி பழனிசாமி இன்னும் பேப்பரில் மட்டும்தான் அதிமுக பொதுச்செயலாளராக உள்ளார்.
ஒட்டுமொத்த அதிமுகவும் தவெகவில்தான் உள்ளது. அதிமுக தொண்டர்களின் வாக்குகள் இல்லாமல் தவெகவுக்கு வெற்றி கிடைத்திருக்காது’’ என்று பேசியிருந்தார்.

ஆதவ்வின் இந்த பேச்சுக்குத்தான் கே.பி.முனுசாமி ஆத்திரப்பட்டுள்ளார்.



