அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை ரஜினிகாந்த் மீது வீசிவிட்டு அதற்கு மன்னிப்பு கேட்காததால் ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை , தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆதவ் அர்ஜூனாவை கண்டித்து ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவை பலமுறை நேரடியாகவே எதிர்த்தவர் ரஜினி. அவர் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். அதனால் நாங்களும் மக்கள் பணி செய்துவருகிறோம். புதிதாக கட்சி தொடங்கியவர்கள் தேவையில்லாமல் அவரை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்கின்றனர் ரசிகர்கள்.

’’காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச்சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம். தலைவா…வேதனை, வெட்கம், அவமானம். காலம் பேசாது. நிச்சயம் பதில் சொல்லும். களத்தில் சந்திப்போம். கதம் , கதம்’’ என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார்கள்.

ரஜினியிடம் ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்காவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் நிற்கும் தொகுதியில் ஒரு ரஜினி ரசிகரை களமிறக்கி அவரை தோற்கடிப்போம் என்று சபதம் ஏற்றுள்ளனர்.



