• அரசியல்
    அரசியல்Show More
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
    thiruma vijay vannarasu
    என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்… ஆ .ராசா ஆவேசம்
    May 22, 2026 at 11:56 am
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    23 May 2026 Horoscope,
    இன்றைய ராசிப்பலன்-23.05.2026
    2026-05-25
    , 22 may 2026 rasi palan,
    இன்றைய ராசிப்பலன்- 22.05.2026
    2026-05-25
    21 May 2026 Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 21.05.2026
    2026-05-25
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    london protest
    உலகம்
    புலம்பெயர்ந்தோருக்கு எதிராக லண்டனில் வெடித்த போராட்டம் – இந்தியர்களின் நிலைமை என்ன?
    2025-09-26
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    South Korea factory fire
    உலகம்
    தென் கொரியா தொழிற்சாலை தீ விபத்து-10 பேர் உயிரிழப்பு,59 பேர் படுகாயம்!
    2026-03-21
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் – தணிக்கை கத்திரியின் அரசியல்
Share
35°C
Chennai
haze
36° _ 34°
59%
5 km/h
Mon
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் – தணிக்கை கத்திரியின் அரசியல்

Last updated: 2026-01-28 8:34 am
Rohini R 72 Views
Share
JANANAYAGAN CENSOR ISSUE
SHARE

குற்றப்பத்திரிகை என்கிற தமிழ்ப்படம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. சி.பி.ஐ. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் விசாரணை நடந்துகொண்டிருந்த காலத்தில், இந்தப் படம் எடுக்கப்பட்டது. விசாரணைத் தரவுகளுக்கும் திரைப்படக் கதையின் கருத்துகளுக்கும் மாறுபாடு இருந்தது. அது அரசியல் கண்ணோட்டத்தில் அணுகப்பட்டது. விளைவு? குற்றப்பத்திரிகை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் எனப்படும் சென்சார் சர்டிபிகேட் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. கடைசியில், 15 ஆண்டுகள் கழித்துதான் படத்திற்கு சான்றிதழ் கிடைத்தது. அதுவும் பல காட்சிகள் வெட்டப்பட்ட நிலையில்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பளிக்கப்பட்டு, அதற்கான மேல்முறையீடு, அரசியல் கண்ணோட்ட மாற்றங்கள், தலைமுறை இடைவெளி இத்தனையையும் கடந்து குற்ற்பபத்திரிகை வெளியானபோது, சாரமின்றிப் போய்விட்டது. குற்றப்பத்திரிகை படம் கிடப்பில் போடப்பட்டிருப்பதை ரசிகர்கள் மறந்து போன நிலையில், அது வெளியாகி, வரவேற்பின்றிப் போய்விட்டது. அந்தப் படத்தின் கதையுடன் அரசியல் கலந்திருந்தது. ஆனால், அதன் நடிகர்கள், இயக்குநர், தொழில்நுட்பம் சார்ந்தவர்கள் கட்சி அரசியலில் தலைவர்களாகவோ, பொறுப்புகளிலோ இல்லை.

குற்றப்பத்திரிகையை அன்றைய மத்திய அரசின் சென்சார் போர்டு எப்படி கையாண்டதோ, ஜனநாயகன் படத்தை இன்றைய மத்திய அரசின் சென்சார் போர்டு அப்படித்தான் கையாள்கிறது. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம், விஜய் நடித்த ஜனநாயகன். அதன் கதாநாயகனான விஜய், இப்போது அரசியல் கட்சித் தலைவர். அதனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்தப் படத்தை வெளியிடும்போது, அது அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி, தேர்தல் கள அரசியலில் கைக் கொடுக்கும் என்ற கணக்குடன் வேலைகள் நடந்தன.

அரசியல் கட்சி தொடங்கிவிட்டதால், இனிமேல் நடிக்கப்போவதில்லை என்றும், ஜனநாயகன் தான் தனது கடைசிப்படம் என்று விஜய் அறிவித்ததால், அவருடைய கட்சியில் உள்ள ரசிகர்கள், கட்சிக்கு அப்பாற்பட்ட ரசிகர்கள் எனப் பலரும் படத்தை மிகவும் எதிர்பார்த்தனர். பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகும்போது, வேறு எந்தப் படமும் வெளியாகக்கூடாது என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ரிலீஸ் என்றதும், பராசக்தி படத்தயாரிப்பு நிறுவனத்தின் மீதும், சிவகார்த்திகேயன் மீதும் கோபத்தைக் கொட்டி சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகப் பதிவிட்டவர்களும் உண்டு. பராசக்தி பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. தனியாக வெளியாகவேண்டும் என நினைத்த ஜனநாயகன் எப்போது ரிலீஸாகும் என்பது தெரியாமல் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.

பராசக்தி படத்திற்கும் சென்சார் பிரச்சினைகள் இருந்தன. அதன் இயக்குநர், எந்தெந்த காட்சிகளில் தணிக்கைத் துறை அனுமதி மறுக்கும் என்பதை யூகித்து, அதற்கு மாற்றான காட்சிகளை முன்கூட்டியே எடுத்து வைத்திருந்ததால், தணிக்கைத் துறை சொன்ன மாற்றங்களை செய்து, படத்தை வெளியிட்டு விட்டார். பராசக்தி படத்துக்கு சென்சாரில் என்னென்ன பிரச்சினைகள் வந்தன என்பதை அதன் இயக்குநர் வெளிப்படையாக சொன்னதுபோல, ஜனநாயகனுக்கு சென்சார் என்ன நெருக்கடி தருகிறது என்பதை அதன் இயக்குநர் சொல்லத் தயங்குகிறார். கட்சித் தலைவராகிவிட்ட கதாநாயகன் விஜய்யும் வாய் திறக்க மறுக்கிறார்.

ஊடக செய்திகளின் அடிப்படையில், ஜனநாயகன் படத்தில் ராணுவம் தொடர்பான காட்சிகள் இருப்பதாகவும், அதற்குரிய தடையின்மைச் சான்று பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. படத்தில் மதரீதியான காட்சிகள் இருப்பதால் சென்சார் எதிர்ப்பத் தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டிரைலரில் வில்லன்கான அரசியல்வாதிகளை கதநாயகன் விஜய் அடித்து வெளுப்பது போல காட்சி இருக்கிறது. விஜய்யும் தற்போது ஒரு கட்சிக்குத் தலைவராக இருப்பதால், தன்னுடைய அரசியல் எதிரிகளை வெளுப்பது போன்ற குறியீடாகக் கருதி, இந்தக் காட்சிக்கு சென்சார் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இவை எல்லாமே செவி வழித் தகவல்கள்தான். எதுவும் தெளிவாக முடிவாகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், நீதிமன்றத்திற்கு சென்றது ஜனநாயகன் படக்குழு. தனி நீதிபதி தீர்ப்பு, அதற்கு சென்சார் போர்டு எதிர்ப்பு, உயர்நீதிமன்றத்தில் முறையீடு, அங்கு தனி நீதிபதி தீர்ப்பு ரத்து, மீண்டும் தனி நீதிபதியிடம் முறையிடுமாறு உத்தரவு என சென்சார் சிக்கல்கள் தொடர்வதால், பொங்கலுக்கு வெளியிடுவதாகத் திட்டமிடப்பட்ட ஜனநாயகன், இந்திய ஜனநாயகத்தின் முக்கிய நாளான குடியரசு தினத்தன்றுகூட வெளியாக முடியவில்லை.

தணிக்கைத் துறையின் நெருக்கடிகள் திரைத்துறைக்குப் புதிததல்ல. அவற்றை எதிர்கொள்ளும் வழியும் ஜனநாயகன் படக்குழுவுக்கு சரியகத் தெரியவில்லை. இதில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசும் துணிச்சலும் ஜனநாயகன் ஹீரோவான அரசியல் கட்சித் தலைவர் விஜய்க்கு இல்லை.

TAGGED:jananathan moviejananayaganonline tamil newstamilnadutvkvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink1
Previous Article Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 28.01.2026
Next Article latest news மோகன் குமாரமங்கலம் முதல்.. அரசியலை உலுக்கிய 12 விமான சோகங்கள்

உலகம்

Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

dmk 1
இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
May 25, 2026 at 6:07 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
May 25, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?