மாநிலங்களவை உறுப்பினர் ஆக விரும்புகிறேன். அதனால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று நிதிஷ்குமார் அறிவித்ததும், இது என்ன சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆக விரும்புகிறாரே நிதிஷ்குமார். இவருக்கு என்ன ஆயிற்று? என்று சிலர் கேட்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பலருக்கும் தெரிந்த உண்மை ஒன்று உண்டு. அது பாஜகவின் அழுத்தம்.
குழந்தைகளின் கைபிடித்து எழுத வைப்பது போன்றுதான் நிதிஷ்குமாரை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று பதிவிட வைத்திருக்கிறது பாஜக அழுத்தம். இப்படி ஒரு நிலைமை எடப்பாடி பழனிசாமிக்கும் வரும் என்றுதான் பலகாலமாக பலரும் எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதிமுகவினரின் காதில்தான் அது விழவே இல்லை.

நிதிஷ்குமாரையாவது மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன். அதனால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று எழுத வைத்தது பாஜக. அநேகமாக எடப்பாடி பழனிசாமியை, ‘’அரசியலில் இருந்து விலகுகிறேன். அதனால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்’’என்று எழுதவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படும் ஆளுமை இழந்து, எதற்கெடுத்தாலும் டெல்லிக்கு ஓடும் பழனிசாமி, நிர்வாகத்திறனும் இல்லாமல் தன்னை ஒரு ஆளுமை மிக்க தலைவர் என்றும், சிறந்த நிர்வாகத்திறன் படைத்தவர் என்றும் தமிழக மக்களிடையே அரற்றிக் கொண்டிருக்கிறார்.
உண்மயில் யார் ஆளுமை மிக்க தலைவர்? என்று மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவர் என்றும், சிறந்த நிர்வாகத்திறன் படைத்தவர் என்றும் தெரிந்ததால்தான் இரண்டாவது முறையாகவும் அவர் அரியணை ஏறுவதற்கான சூழல் நிலவி இருக்கிறது. பாஜகவை எதிர்த்து நிற்கும் ஒரே ஆளுமையாக திகழ்கிறார் என்பதால்தான் ‘இந்தியா’ கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும் என்று நாடெங்கிலும் அழைப்புகள் எழுகின்றன.

இவ்வளவு நுட்பமான மேலாண்மைத் திறனும், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான தொலைநோக்குப் பார்வையும் கொண்ட ஒரு தலைவரை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் கண்டதில்லை என்று ஏடுகளும் நாடும் போற்றுகின்றன. மு.க. ஸ்டாலின் நிர்வாக முறையும், அரசியல் அணுகுமுறையும் ‘செயல்பாட்டுத் திறனுக்கு’ (Operational Excellence) ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
பல தலைவர்கள் ஒரு திட்டம் தோல்வியடையும் போது மாற்றுத் திட்டங்களைத் தேடித் தடுமாறுவார்கள். ஆனால், மு.க. ஸ்டாலின் அவர்களின் வியூகம் “Plan Z” வரை நீண்டது. அந்த வியூகத்தின் சிறப்பம்சமே, “Plan Z” என்பது பின்வாங்குவதற்கான வழியல்ல; அது “Plan A”-வை எவ்வித தடையுமின்றி வென்றெடுப்பதற்கான இறுதிவரை ஓயாத உழைப்பைக் குறிப்பதாகும்.
இது அவர் முன்னர் குறிப்பிட்ட Do and Die என்ற அறைகூவலுக்கு உயிர் கொடுப்பது போல் அமைந்துள்ளது. ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால், அதில் முழுமையான முடிவுகளைப் பெறும் வரை ஓயாமல் செயல்படுவதே அவரது பாணி.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, “பாஜக-வுடன் எப்போதும் கூட்டணி கிடையாது” என்று அவர் ஒரு தீர்க்கமான உறுதிமொழியை வழங்கினார். பதவி சுகத்திற்காகவோ அல்லது அரசியல் லாபத்திற்காகவோ தனது சொல்லிலிருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. இது வெறும் அரசியல் முடிவு மட்டுமல்ல; ஒரு சித்தாந்தப் போர். தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாத குணமே இன்று மக்களிடம் அவர் பெற்றுள்ள மிகப்பெரிய நம்பிக்கைக்கு அடித்தளமாக இருக்கிறது.
அரசியலில் புதிய கூட்டணிகளை உருவாக்குவதும், ஏற்கனவே உள்ள கூட்டணிகளைத் தக்கவைப்பதும் ஒரு தனிநபரின் ஈகோவை கடந்து சிந்திக்க வேண்டிய விஷயம். அதை முதல்வர் ஸ்டாலின் மிகச் சிறப்பாகச் செய்கிறார். தமிழ்நாட்டின் நலன் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியின் வலிமை ஆகியவையே தனது தனிப்பட்ட விருப்பங்களை விட முக்கியம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். ஒரு பெரிய இலக்கிற்காக அனைவரையும் அரவணைத்துச் செல்வது ஒரு சிறந்த தலைவனுக்கான இலக்கணம்.
சொல்லிய சொல்லைக் காப்பாற்றுவதும், அந்தச் சொல்லுக்காகக் களத்தில் நின்று போராடுவதும் ஒரு தலைவனுக்குரிய உன்னத பண்புகள். வியூகங்களை வகுப்பதிலும் சரி, அதனைச் செயல்படுத்துவதிலும் சரி, அவர் ஒரு புதிய வரலாற்றைப் படைத்து வருகிறார்.



