பாமக இரண்டாக உடைந்ததில் ராமதாஸ் பக்கம் நின்றுவருகிறார் ஜி.கே.மணி. பாமக இரண்டாக உடைந்ததற்கே ஜி.கே.மணிதான் காரணம் என்று அன்புமணியும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
பாமகவின் தலைவர் பொறுப்பில் ஜி.கே.மணிதான் இருந்து வந்தார். அன்புமணி அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதால்தான் அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.
இதற்கு பரிகாரமாகத்தான் பாமகவில் ஜி.கே.மணி மகன் தமிழ்க்குமரனுக்கு முக்கிய பொறுப்பு தர முன் வந்தார் ராமதாஸ். தமிழ்க்குமரன் அதை மறுத்து வந்தார்.

பெரிய கூட்டணிக்கு ராமதாஸ் செல்வார் என்று ஜி.கே.மணி எதிர்பார்த்திருந்தார். ஆனால் தனிக்கட்சி தொடங்கி சசிகலாவுடன் கூட்டணி அமைத்ததில் அதிருப்தியிலுள்ளார்.
இந்த நிலையில் அரசியல் எதிர்ர்காலம் கருதி, திமுக கூட்டணிக்கு வந்துவிட்டார் தமிழ்க்குமரன்.
டெல்லியில் அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்க்குமரன் களமிறங்க உள்ளார். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட பென்னாகரம் தொகுதியில் அவர் போட்டியிடுவதாக தகவல்.



