• அரசியல்
    அரசியல்Show More
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    Jun 23, 2026 at 5:57 pm
    shanmugam
    நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
    Jun 23, 2026 at 2:59 pm
    rajini video
    ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
    Jun 22, 2026 at 2:15 pm
    jayaalalithaa poongundran
    அந்த ஜால்ராக்கள் கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணம்- ஜெ., உதவியாளர் குற்றச்சாட்டு
    Jun 22, 2026 at 12:34 pm
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    tn
    14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்
    2026-06-22
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    2026-06-24
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    dharman rajini
    தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்
    2026-06-24
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    2026-06-23
  • இந்தியா
    இந்தியாShow More
    teligram
    தடை நீக்கம் – மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டெலிகிராம்
    Jun 23, 2026 at 5:11 pm
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Gaddafi son killed -Online Tamil News
    உலகம்
    லிபியாவில் மர்ம துப்பாக்கிச் சூடு – கடாபியின் மகன் உயிரிழப்பு !
    2026-02-04
    Trump Iran attack halt,
    உலகம்
    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு!
    2026-03-23
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Jeffrey Epstein -Online Tamil News
    உலகம்
    அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்- எப்ஸ்டீன் விவகாரத்தின் பின்னணி?
    2026-02-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: மக்கள் போராளி நல்லகண்ணு! தலைவர்கள்  இரங்கல்
Share
30°C
Chennai
overcast clouds
30° _ 30°
66%
9 km/h
Sat
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

மக்கள் போராளி நல்லகண்ணு! தலைவர்கள்  இரங்கல்

Last updated: 2026-02-25 4:44 pm
T.R.Kathiravan 299 Views
Share
nallakannu3
SHARE

தமிழக அரசியலின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்ந்த தோழர் இரா.நல்லகண்ணு இன்று (25.02.2026)ல் மறைந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் விடுத்துள்ள இரங்கல்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : “எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் – தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்!

nallakannu mk stalin

சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் – 

“சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத் 

தூக்கினில் ஏற்றினாலும்

விட்டுப்பிரியாது – செங்கொடி

வீரம் குறையாது”

என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு.

கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர்! 

முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், தலைவர் கலைஞருடன் தோளோடு தோள் நின்று களமாடியவர். 

பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். 

nallakannu4

முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருதை வழங்கிச் சிறப்பித்தார். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தோழர் அவர்களுக்குத் தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது எனது பெரும் பேறு!

எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன்.

தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்!

nallakannu r

“தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்” என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது. 

தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!

மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை – இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!

nallakannu1

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி : ‘’இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான 

திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.

Edappadi Palaniswami

‘தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த’ சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’’

முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை : ’’சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் R. நல்லகண்ணு அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினர் மற்றும் தோழமைகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ’’

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

nallakannu kamalhaasan

ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். 

தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ’’இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா இரா.நல்லகண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. 

AMMK joins NDA-TTV Dhinakaran announcement

பொதுவாழ்க்கையில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதோடு, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்திட்ட எளிமையின் சிகரம் ஐயா இரா.நல்லகண்ணு அவர்களின் மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும். 

ஐயா இரா.நல்லகண்ணு அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’’

seeman

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ’’பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்!  ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்!

விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி! வார்த்தைக்கும்,  வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த  பொதுவுடைமை பிதாமகன்!

பெருமதிப்பிற்குரிய ஐயா நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிய சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்றபோது, ஐயா நம்மை விட்டு மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.’’

பாமக – அன்புமணி ராமதாஸ் :இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரும்,  விடுதலைப்போராட்ட வீரருமான  தோழர் நல்லக்கண்ணு அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த  நல்லக்கண்ணு அவர்கள் தமது பள்ளிப் பருவத்திலேயே பொதுவுடைமை இயக்கம் குறித்த  தகவல்களை பள்ளி ஆசிரியர் மூலம் அறிந்து கொண்டு, அந்த இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்கள் எவ்வாறு எளிமையாக வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.

anbumani ramadoss

அடித்தட்டு மக்களின்  நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், தமக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாதவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பிறகு பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபட்டதற்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.

தியாகத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்த அவர், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவராக திகழ்ந்தார்.

தோழர் நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தோழர்கள், பொதுவுடைமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

vijay tvk2

தவெக தலைவர் விஜய் : ‘’சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.

அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.’’

TAGGED:#Nallakannu#தோழர்_நல்லக்கண்ணுADMKanbumaniramadasDMKepsmk stalinnalakkannuNallakannu passed awayNTKonline tamil newspmkr nallakannuseemantamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article r nallakannu எளிமையின் சிகரம் தோழர் இரா.நல்லகண்ணு: 1924 – 2026 கடந்து வந்த பாதை
Next Article vedannavami எழுத்தாளரை கரம்பிடித்தார் வேடன்!

உலகம்

Global oil supply restoration
சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
உலகம் Jun 18, 2026 at 6:29 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kamal rajini
படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
Jun 24, 2026 at 2:28 pm
rajni dharman speech
நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
Jun 24, 2026 at 1:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?