2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடந்தது. கூட்டணியில் இருக்கும் அனைத்துக்கட்சி தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையில் நடந்தது இந்த பொதுக்கூட்டம்.
இந்த பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியை திரும்பிப்போ என்று ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழகம் வந்த மோடிக்கு எதிர்ப்பு ஏன்?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்றி மகாத்மாவுக்கு துரோகம் செய்த மோடியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு, தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தர முடியாது என்று பிடிவாதமாக இருக்கும், கோவை, மதுரை, மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்த, ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மீண்டும் நிராகரித்த, மாநிலங்கள் அளிக்கும் வரியில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வை அள்ளி அள்ளிக்கொடுக்கும், தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களுக்கு கிள்ளி கொடுக்கும் மோடியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்கினை டிரெண்ட் செய்து வருகின்றனர்.



