அண்டார்டிகாவில் உலகின் முதல் Ice Core பாதுகாப்பு பெட்டகம்
உலகம் முழுவதும் உள்ள பனிப்பாறைகள் இன்று மிக வேகமாக உருகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றம் (Climate Change) ஆகும். இந்த மாற்றம் தொடர்ந்து அதிகரித்தால் பல முக்கிய பனிப்பாறைகள் எதிர்காலத்தில் முற்றிலும் மறைந்து போகும் அபாயம் உள்ளது. பனிப்பாறைகள் என்பது வெறும் பனி மட்டும் அல்ல. அவை பூமியின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் காலநிலை வரலாற்றை பதிவு செய்து வைத்திருக்கும் இயற்கை ஆவணங்களாகும்.
இந்த மதிப்புமிக்க தகவல்களை பாதுகாப்பதற்காக ஐரோப்பிய விஞ்ஞானிகள் உலகின் முதல் Ice Memory Sanctuary என்ற Ice Core பாதுகாப்பு மையத்தை Antarcticaவில் உருவாக்கியுள்ளனர். இது உலகளவில் ஒரு மிக முக்கியமான அறிவியல் முயற்சியாக கருதப்படுகிறது. இது ஒரு சாதாரண குளிர்சாதன பெட்டகம் அல்ல. இது பனிக்கடியில் தோண்டப்பட்ட ஒரு பாதுகாப்பான snow cave ஆகும்.
Ice Core என்பது பனிப்பாறைகளில் இருந்து எடுக்கப்படும் நீளமான பனி தூண்கள் ஆகும். இதில் கடந்த கால வெப்பநிலை தகவல்கள் மழைப்பொழிவு விவரங்கள் வளிமண்டலத்தில் இருந்த Carbon Dioxide போன்ற வாயுக்கள் எரிமலை வெடிப்புகளின் தடயங்கள் மற்றும் மாசுபாட்டு பதிவுகள் போன்ற பல முக்கிய Climate Dataகள் அடங்கியுள்ளன. இதன் மூலம் விஞ்ஞானிகள் பூமியின் காலநிலை மாற்றத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த Ice Memory Sanctuary Antarcticaவில் உள்ள Concordia Research Station அருகில் அமைந்துள்ளது. இங்கு வெப்பநிலை எப்போதும் மைனஸ் 52 டிகிரி செல்சியஸ் அளவில் நிலையாக இருக்கும். இந்த இயற்கையான குளிர்ச்சியின் காரணமாக Ice Coreகள் மின்சாரம் இல்லாமலேயே பாதுகாப்பாக நீண்ட காலம் சேமிக்கப்படுகின்றன.
இந்த Sanctuaryயில் Alps Andes Himalayas மற்றும் Africaவின் உயரமான மலைப்பகுதிகளில் உள்ள அபாயத்தில் இருக்கும் Mountain Glaciersஇல் இருந்து எடுக்கப்பட்ட Ice Coreகள் சேமிக்கப்பட்டுள்ளன. இந்த பனிப்பாறைகள் எதிர்காலத்தில் முழுவதுமாக உருகி மறைந்து போக வாய்ப்புள்ளது. அதற்கு முன்பே அவற்றின் காலநிலை நினைவுகளை பாதுகாக்கும் முயற்சிதான் இந்த Ice Memory Project ஆகும்.
Ice Memory Sanctuary என்பது ஒரு Climate Time Capsule போல செயல்படுகிறது. இது மறைந்து வரும் பனிப்பாறைகளின் தகவல்களை எதிர்கால Scientistsக்காக பாதுகாக்கிறது. மேலும் Climate Change பற்றிய விழிப்புணர்வை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது.
Antarcticaவில் அமைக்கப்பட்டுள்ள Ice Memory Sanctuary என்பது மனிதகுலத்தின் அறிவியல் நினைவகம் ஆகும். பனிப்பாறைகள் ஒருநாள் மறைந்தாலும் அவற்றின் வரலாறு தகவல்கள் மற்றும் நினைவுகள் இந்த Ice Core Vault-ல் என்றும் பாதுகாப்பாக இருக்கும். இது பூமியின் கடந்த காலத்தை புரிந்துகொள்ளவும் எதிர்காலத்தை பாதுகாக்கவும் உதவும் ஒரு மிக முக்கியமான உலகளாவிய முயற்சி.



