விஜய்யின் அலட்சிய பதிலால் வேதனை அடைந்திருக்கிறது கேவிஎன் நிறுவனம்.
உலக ஊடகங்களில் முதன்முறையாக.. என்ற அறிவிப்போடு விஜய்யை பேட்டி எடுக்கலாம் என்று முயற்சித்திருக்கிறது என்.டி.டிவி. எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் என்.டி.டிவி நிறுவனத்திற்கே நேரில் சென்று பேட்டி அளித்திருக்கையில் விஜய்யை அவரது இல்லத்திற்கே பேட்டி எடுக்க சென்றனர்.
ஆனால் விஜய் ஆஃப் த ரெக்கார்டு ஆக பேட்டி அளித்திருக்கிறார். வந்தவர்களிடம் பேசி அனுப்பி இருக்கிறார். அப்போது ஜனநாயகன் படம் தாமதம் குறித்த கேள்விக்கு, இது எதிர்பார்த்த ஒன்றுதான். அரசியல் வருகையினால் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அலட்சியமாக சொல்லி இருக்கிறார் விஜய்.

இதைக்கேள்விப்பட்டதும் ஆடிப்போயிருக்கிறது ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். ஏற்கனவே இந்த பட தாமதம் குறித்து எதுவும் பேசாமல் மவுனமாக இருக்கும் விஜய் கட்சி வேலைகளில் மட்டும் மும்முரம் காட்டி வருவது கேவிஎன் நிறுவனத்திற்கு வேதனை அளித்திருக்கிறது. இதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாகவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று சொன்னால் தெரிந்தேதான் நம்மை கிணற்றில் பிடித்து தள்ளியிருக்கிறாரா என்று நொந்து போயிருக்கிறது கேவிஎன் நிறுவனம்.

ஜனநாயகன் படம் தொடர்பான சென்சார் போர்டு போட்ட முட்டுக்கட்டையினால் மறு விசாரணை இன்னும் நடைபெறாமல் உள்ளது. ஐபிஎல் போட்டிகள், எலெக்ஷன் எல்லாம் அடுத்தடுத்து வரிசை கட்டுவதைப் பார்த்தால், வழக்கும் நீடிப்பதால் அநேகமாக ஜனநாயகன் படம் மே மாதம்தான் வரும் போலிருக்கிறது.



