மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் தட்டம்மை (Measles) நோய் வேகமாகப் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்நாட்டின் முக்கிய நகரமான குவாடலஜாராவில் தட்டம்மை பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளதால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் மெக்சிகோ முழுவதும் சுமார் 1,981 பேருக்குத் தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாலிஸ்கோ மாகாணமே இதில் முதலிடத்தில் உள்ளது. மேலும், கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் முகக்கவசம் தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.(Online Tamil News)

இதற்கிடையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற உள்ளதால், வெளிநாட்டுப் பயணிகள் வருகைக்கு முன்பே சுகாதாரச் சூழலைச் சீர்செய்ய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், தட்டம்மை தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடையே நிலவும் மந்தநிலையே இந்த பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.



