• அரசியல்
    அரசியல்Show More
    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    May 29, 2026 at 6:36 pm
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    May 29, 2026 at 6:01 pm
    aadhav arjuna speech
    ஆதவ் அர்ஜுனாவின் தற்குறி பேச்சு – விவசாயிகள் கடும் கண்டனம்
    May 29, 2026 at 1:31 pm
    ammk ttv dinakaran
    சொல்லப்படும் தகவல் உண்மையென்றால் தவெக அரசு எதற்கு? டிடிவி தினகரன் விளாசல்
    May 29, 2026 at 12:22 pm
    modi meet vijay
    7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
    May 28, 2026 at 4:52 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    2026-05-29
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    2026-05-29
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    2026-05-29
    Iran Oil Sanctions
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    Vladimir Putin congratulates Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா காமேனி: ஆதரவுக்கரம் நீட்டும் ரஷ்யா!
    2026-03-09
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    India global GDP growth 2026-Online Tamil News
    உலகம்
    உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை – எலான் மஸ்க் !
    2026-02-02
    Sharif Osman Hadi- death-Bangladesh-Sheikh Hasina-Violence-world news
    உலகம்
    வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்…போராட்டக்குழு தலைவர் உயிரிழப்பு !
    2025-12-19
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: நிதிஷ்குமாரை ஏன் பாஜக ஹைஜேக் செய்தது?
Share
32°C
Chennai
mist
32° _ 31°
77%
4 km/h
Sun
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

நிதிஷ்குமாரை ஏன் பாஜக ஹைஜேக் செய்தது?

nitish kumar
Last updated: 2026-03-05 4:35 pm
T.R.Kathiravan 151 Views
Share
SHARE

கூட்டணிக்கட்சிகளை பாஜக கபளீகரம் செய்து வருகிறது என்கிற குற்றச்சாட்டை மேலும் உறுதி செய்கிறது பீகார்  சம்பவம். மகாராஷ்டிராவில் கடந்த 2022ல் சிவசேனாவை ஹைஜேக்  செய்தது போன்று பீகாரில் இப்போது ஜேடியு நிதிஷ்குமார் கட்சியை ஹைஹேக் செய்திருக்கிறது பாஜக. இது வாக்களித்த மக்களுக்கு மாபெரும் துரோகம் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

யார் இந்த நிதிஷ்குமார்? 

பீகார் அரசியலின் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார் நிதிஷ்குமார். பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள கல்யான் பிகா கிராமம்தான் நிதிஷ்குமாரின் பூர்வீகம்.  பாட்னா அடுத்த பக்தியார்பூரில்  1951ல் பிறந்த நிதிஷ்குமார், குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர். பாட்னாவில் பொறியியல் கல்லூரியில் படித்து மின்வாரியத்தில் வேலை செய்து வந்த நிதிஷ்குமார், தந்தையின் சுதந்திரப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு அரசியலில் பிரவேசம் செய்தார்.  

nitish kumar 1998

தனக்கு வந்த பிரதமர் நாற்காலியைக் கூட புறந்தள்ளி, தேர்தல் அரசியலில் ஈடுபடாத மக்கள் தலைவராக விளங்கிய ஜெ.பி. எனும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மீது கொண்ட ஈர்ப்பினால் அவரது ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார் நிதிஷ்குமார்.   இன்றைக்கு போட்டியாளர்களாக இருக்கும் லாலு பிரசாத் யாதவும், நிதிஷ்குமாரும் அன்றைக்கு ஜனதா கட்சியின்  நம்பிக்கைக்குரிய அடுத்த தலைமுறை தலைவர்களாக விளங்கினர். 

இந்திரா காந்திக்கு எதிராக களமாடிய ஜனதா கட்சி சார்பில் 1977ல் முதல் முறையாக அரசியல் களம் கண்டார் நிதிஷ்குமார். முதலிரண்டு தேர்தல்களில் தோல்வியுற்றாலும் 1985ல் அதே ஹர்நாட் தொகுதியில் வென்றார். 

விபிசிங் முயற்சியால் 1988ல் ஜனதா கட்சி, லோக் தளம், ஜன மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா தளம் உருவானது. 1989ல் ஜனதா தளம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பார் தொகுதியில் வென்று  விபி சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார் நிதிஷ்குமார்.

nitishkumar jayaprakash narayanan

1990 சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் பீகாரில் ஆட்சியைப் பிடித்தது ஜனதா தளம்.  லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சரானார்.  அவர் முதலமைச்சர் ஆனதில் நிதிஷ்குமார் பெரும்பங்கு வகித்தார். 1994ல் லாலு பிரசாத் யாதவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் ஜனதா தளத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி, ‘சமதா’ கட்சியைத் தொடங்கினார் நிதிஷ்குமார்.  1995 சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கிய நிதிஷ்குமாருக்கு 7 இடங்கள் மட்டுமே கிடைத்தது.  அந்த தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் ஆனார் லாலு பிரசாத் யாதவ். ஆனால், 1997ல் கால்நடை தீவன ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் லாலு பிரசாத் யாதவ்.  ராஜினாமா செய்தவற்கு  முன்பாக ஒரு   அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆடினார் லாலு பிரசாத் யாதவ்.  அவசர அவசரமாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கி சட்டமன்றத்தில் ஆதரவை பெற்று தன் மனைவி  ராப்ரி தேவியை சட்டமன்ற மேலவை உறுப்பினாராக்கி முதலமைச்சரும் ஆக்கினார். 5ம் வகுப்பு மட்டுமே படித்து அரசியல் ஆத்திச்சூடியே அறியாத ராப்ரிதேவி  முதலமைச்சர் ஆனது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.  

.இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் 1998 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் வென்று மத்திய ரயில்வேதுறை அமைச்சரானார் நிதிஷ்குமார்.  2000ல் நடந்த சட்டமன்ற தேர்தல் மூலம் மாநில அரசியல் பக்கம் திரும்பினார் நிதிஷ்குமார்.  அந்த தேர்தலில் பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதில் நிதிஷ்குமாருக்கு  151 இடங்கள் கிடைத்தது. ஆனால் தனிப் பெரும்பான்மையாகவே ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 124 இடங்கள் கிடைத்தது.  இதனால் இரண்டு கூட்டணி கட்சிகளுக்குமே ஆட்சிமைக்க தேவையான 163 இடங்கள் மெஜாரிட்டி இல்லை.  ஆனாலும் அப்போது மத்தியில் வாய்பாய் பிரதமராக இருந்ததால் அவரின் ஆசீர்வாதத்தினால் முதலமைச்சரானார் நிதிஷ்குமார்.

nitish kumar lalu

.7 நாளில் பறிபோன முதல்வர் நாற்காலி! வாஜ்பாய் தயவில் முதலமைச்சர் ஆனாலும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் 7 நாளிலேயே முதலமைச்சர் பதவியை ராஜினிமார் செய்தார் நிதிஷ்குமார்.  பெரும்பான்மையை காட்டி  முதலமைச்சரானார் ராப்ரிதேவி. அந்த ஆட்சிக்காலம் முழுவதும் அவரே முதலமைச்சராக இருந்தார்.

2000 முதல் 2002ம் ஆண்டு வரையிலும் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக வலம் வந்தார் நிதிஷ்குமார்.  இதற்கிடையில் பீகார் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.  2001ல் பீகார் மாநிலத்தில் இருந்து 18 மாவட்டங்களை பிரித்து தனி மாநிலமாக உருவெடுத்தது ஜார்கண்ட்.  இதனால் 342 தொகுதிகள் என்றிருந்த பீகாரின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 243 ஆக குறைந்தது.

குடியரசுத்தலைவர் ஆட்சி: 2003ம் ஆண்டில் சமதா கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்த நிதிஷ்குமார், 2005 பிப்ரவரியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.  இதில் லாலு கட்சிக்கு 75 இடங்களும், நிதிஷ் கட்சிக்கு 55 இடங்களும், பாஜகவுக்கு 37 இடங்களும் கிடைத்தது. யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

rahul gandhi nitish kumar

ஆட்டம் ஆரம்பம்: குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்த அதே 2005ம் ஆண்டில் நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் நிதிஷ்குமார்.  அந்த தேர்தலின் முடிவில் 15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த லாலு கட்சியை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதலமைச்சரானார் நிதிஷ்குமார். அப்போது மக்களவை எம்.பி. ஆக இருந்ததால் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி 2வது முறையாக முதலமைச்சரானார் நிதிஷ்குமார். அப்போதே லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் நிதிஷ்குமார்.

2005 க்கு பிறகு முழுமையாக மாநில அரசியலில் இறங்கிவிட்டார் நிதிஷ்குமார். 2010 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடாலும் தனித்து போட்டியிட்ட 141 இடங்களில் 115 இடங்களை வென்றது நிதிஷ் கட்சி.  பாஜக வென்ற 91 இடங்களையும் சேர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சரானார்.  அந்த முறை அவர் 3வது முறையாக முதலமைச்சரானார்.

ராஜினாமா: 2014ல் நடந்த நாடாளுமன்ற  தேர்தலில் 17 வருட பாஜக உறவை முறித்துக்கொண்டு தனி கூட்டணி அமைத்து  போட்டியிட்ட நிதிஷ்குமாருக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்தது.  வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததால் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.  அதனால் அவரது கட்சியில் இருந்து ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

vajpayee nitishkumar

.மகாபந்தன் கூட்டணி 2015 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார் நிதிஷ்குமார்.  2017ல்  லாலுவின் ரயில்வே துறை விவகார வழக்கு பூதாகரமாக வெடித்ததால் காங்கிரஸ் உறவை முறித்துக்கொண்டு மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து மீண்டும் முதலமைச்சரானார். 2020ல் பாஜக கூட்டணியில் மீண்டும் முதலமைச்சரானார். அந்த தேர்தலில்         பாஜக  74 இடங்களை வென்றிருந்தது.  ஆனால் 43 இடங்களை மட்டுமே வென்றிருந்த நிதிஷ்குமாரை முதலமைச்சராக்கியது தேசிய ஜனநாயக கூட்டணி.

பிரதமர் கனவு: 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் கனவில் பாஜகவை கழற்றி விட்டுவிட்டு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரசுடன் கைகோர்த்து மீண்டும் முதலமைச்சரானார்.

இந்தியா கூட்டணி தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் என்று நினைத்திருந்த நிதிஷ்குமாருக்கு அது நடக்காததால் அக்கூட்டணியில் இருந்து விலகி செத்தாலும் பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்ற பேச்சை வாபஸ் வாங்கிக்கொண்டு பாஜகவுடன் கைகோர்த்து    9வது முறையாக முதலமைச்சரானார்.

மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இழந்த பாஜக ஆட்சி அமைக்க முக்கிய நபராக உருவெடுத்திருந்தார் நிதிஷ்குமார்.  அந்த வகையில் இப்போது நடந்து முடிந்த 2025 பீகார் சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே போட்டியிட்டு மீண்டும் 10வது முறையாக பீகார் மாநில முதலமைச்சர் ஆகி இருக்கிறார்.

.20 ஆண்டுகள் தொடர் வெற்றிக்கு காரணம்? லாலு – நிதிஷ் இருவருமே பீகாரின் இரு துருவங்கள்.  பீகாரின் பிற்படுத்தப்பட்ட மக்களின் அடையாளமாக லாலு பிரசாத் யாதவ் விளங்குவது போன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் அடையாளமாக விளங்குகிறார் நிதிஷ்குமார்.  ஆனாலும், லாலுவுக்கு இருந்த குடும்ப அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் பலவீனம்தான்  நிதிஷுக்கு பலமாக அமைந்தது. லாலு பிரசாத் யாதவ் – நிதிஷ்குமார் இருவரும் பீகார் அரசியலின் இருபெரும் துருவங்கள் என்றாலும் தொடர்ந்து 20 ஆண்டுகளாக லாலு பக்கம் செல்லாமல் நிதிஷ் பக்கமே முதலமைச்சர் அரியணை இருப்பதற்கு காரணம், கூட்டணிகள்தான். பாஜக வந்துவிடக்கூடாது என்று ஆர்.ஜே.டியும், ஆர்.ஜே.டி. வந்துவிடக்கூடாது என்று பாஜகவும் மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டு நிதிஷ்குமாரை ஆதரிப்பதால்தான் 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் கையில் இருக்கிறது பீகார்.

லாலு பிரசாத் யாதவ், அடுத்து அவரது மனைவி ராப்ரி தேவி, அடுத்து அவரது மகன் தேஜஸ்வி யாதவ் என்று எதிர்தரப்பில் போட்டியாளர்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் மறுமுனையில் 20 ஆண்டுகளாக நிதிஷ்குமாரே போட்டியாளராக நிற்கிறார்.

nitish kumar cm

.MLA ஆகாமலேயே 10வது முறை CM சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகாமலேயே 9வது முறையாக முதலமைச்சர் அரியணை ஏறி இருக்கிறார் நிதிஷ்குமார்.  ஒவ்வொரு முறையும் பீகார் மாநில சட்டமேலவை எனும் எம்.எல்.சி. உறுப்பினராகவே இருந்து முதலமைச்சராகி இருக்கிறார். தற்போது 2025ல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் தேர்தலில் போட்டியிடாமலேயே முதலமைச்சராக அரியணை ஏறுகிறார் நிதிஷ்குமார். 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி.  இந்த அமோக வெற்றியை  சாத்தியமாக்கிய நிதிஷ்குமாருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

தேர்தலில் ஒன்றும் போட்டியிடாதவர் அல்ல நிதிஷ்குமார். 1977 சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் ஹர்னாத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் நிதிஷ்குமார்.  1980ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  1985ல் அதே ஹர்னாத் தொகுதியில் வென்றார்.  எம்.எல்.ஏ. வாக வெற்றி பெற்றாலும் எம்.பியாகவே தொடர விரும்பியதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார் நிதிஷ்குமார்.  1989,1991, 1996, 1998, 1999 தேர்தல்களில் தொடர்ந்து 5 முறை வென்று எம்.பி.ஆனவர் நிதிஷ்குமார்.

1995 பீகார் சட்டமன்ற தேர்தலில்தான் கடைசியாக போட்டியிட்டார் நிதிஷ்குமார்.  அந்த தேர்தலில் ஹர்னாத் தொகுதியில் அவர் வென்று எம்.எல்.ஏ. ஆனார்.  அதன் பின்னர் எம்.எல்.சி.  உறுப்பினராகவே இருந்து முதலமைச்சர் ஆகி வருகிறார்.

.அங்கீகாரம் கூட்டணி நிலைப்பாட்டினை அடிக்கடி மாற்றி வரும் கூட்டணி பலத்திலேயே வென்று வரும் நிதிஷ்குமாருக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

வேலைவாய்ப்பு, தொழில்மயமாக்கலில் உள்ள குறைபாடுகளால் இளைஞர்கள் ஆதரவு குறைந்து நிதிஷ்குமாரின் செல்வாக்கை பாதித்தாலும் வக்ஃப் தொடர்பான சர்ச்சைகளால் சிறுபான்மை மக்கள் ஆதரவு குறைந்துள்ளது என்றாலும், சமூக வாக்குகளை தக்க வைத்து வருகிறார் நிதிஷ்குமார்.  குர்மி சமூகத்தின் 7% வாக்குகளும், கோரி சமூகஙகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் 26% சேர்த்து 33% வாக்குகளை அவர் தக்க வைத்து வருகிறார். இது தவிர பெண்களின் வாக்குகளையும் அவர் கணிசமான அளவில் தக்க வைத்து வருகிறார்.

நடந்து முடிந்த 2025 சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதிகளை வென்று பாஜக முதலிடத்தில் உள்ளது.  85 தொகுதிகளை வென்று நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 2வது இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருந்தாலும் கூட்டணியின் வெற்றிக்கு நிதிஷ்குமாரின் பங்கு அளப்பரியதாக கருதுகிறது பாஜக.  அதனால்தான் நிதிஷ்குமார் அரியணை ஏறுகிறார்.  இதே மாதிரி பல தேர்தல்களில் 2வது 3வது இடம் வந்தாலும் கூட்டணியின் ஒப்பந்த தர்மத்தின் படி நிதிஷ்குமாரே முதலமைச்சர் அரியணையில் ஏறி இருக்கிறார். இது அரசியலில் அவருக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம்.

modi nitishkumar

கூட்டணி விசயத்தில் நிலையற்ற முடிவுகள் நிதிஷ்குமாரின் செல்வாக்கை குறைத்துள்ளன என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், நிதிஷ்குமாரை பொறுத்தவரையிலும் இது ஒரு தேர்தல் வியூகமாகவே உள்ளது. அவர் எந்த கூட்டணியுடன் இணைந்தாலும் அந்த கூட்டணி வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதால் பீகார் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார் நிதிஷ்குமார்.

பாஜக ஹைஜேக்: முதல்வர் பதவியில் இருந்து விலகி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாக நிதிஷ்குமார் அறிவித்திருக்கிறார்.  பாஜகவின் அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை அறிவித்திருக்கிறார் என்கிறார்கள்.  அதற்கேற்றார் போல், புதிதாக அமையவிருக்கும் என்.டி.ஏ. – ஜேடியு கூட்டணி ஆட்சியில் பாஜகவை சேர்ந்தவர் முதல்வர் நாற்காலியில் உட்கார இருக்கிறார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஹைஜேக் செய்தது போன்று, பீகாரில் இப்போது ஜேடியுவை ஹைஜேக் செய்திருக்கிறது பாஜக என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.   என்.டி.ஏ. கூட்டணி வென்றால் தமிழகத்தில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்று மோடி, அமித்ஷா சொல்வதும் கவனிக்கத்தக்கது.

துரோகம்: நிதிஷ்குமாரின் இந்த முடிவு வாக்களித்த மக்களுக்கு மாபெரும் துரோகம் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

TAGGED:biharBJPepsModiNitish Kumarnitishkumaronline tamil newstamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Iran warship sunk near Sri Lanka இந்தியப் பயிற்சியில் பங்கேற்ற ஈரான் கப்பல் மூழ்கடிப்பு-மௌனம் காக்கும் ஒன்றிய அரசு!
Next Article Trump illegal tariffs refund சட்டவிரோத வரி வசூல்: ரூ11.91 லட்சம் கோடியை திருப்பித் தர ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!

உலகம்

Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

c vijayabaskar
இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
May 29, 2026 at 6:36 pm
poongundran sankaralingam
தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
May 29, 2026 at 6:01 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?