என்ன தவம் செய்துபுட்டோம் அண்ணன் தங்கை ஆகிபுட்டோம் என்கிற பாடலுடன் விஜய்யை பார்த்த சந்தோஷத்தில் இளம்பெண்கள் தேம்பித்தேம்பி அழும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. தவெகவினர்தான் இந்த வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.
விஜய் போகுமிடமெல்லாம் ஆதவ் அர்ஜூனாதான் இந்த செட்டப் வேலையைச் செய்கிறார் என்கிறார்கள். விஜய்யின் பெரம்பூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு பெண் விஜய்யைப் பார்த்த சந்தோஷத்தில் அழுகிறார். அதே பெண் கொளத்தூர் பிரச்சாரக் கூட்டத்தில் கண்ணாடி போட்டுக்கொண்டு விஜய்யைப் பார்த்த சந்தோசத்தில் அழுகிறார். ஆறு வித்தியாசங்கள் போட்டி வைத்தால் ஒரு வித்தியாசம் மட்டும்தான் தெரியும். அது கண்ணாடிதான்.

விஜய்க்கு பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகம் இருக்கிறது. விஜய் மேல் பெண்கள் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே ஆதவ் அர்ஜூனா திட்டமிட்டு இந்த செட்டப் வேலையைச் செய்கிறார் என்கிறார்கள்.

கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதும், வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜூனாவின் பிரச்சாரக்கூட்டத்தில் உடைந்த பாட்டில் துண்டுகள் வீசப்பட்டதும் இதே போன்று செட்டப்தான் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.



