ஆட்சியை பிடித்துவிட்ட மாதிரி அதீத நம்பிக்கையில் உத்தேச அமைச்சரவை பட்டியலை பரப்பிக் கொண்டிருக்கின்றனர் தவெகவினர். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் வந்த மாற்றம் என்பதைக் கூட புரிந்துகொள்ளாமல் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பதை தங்கள் கட்சிக்கு சாதகமாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தவெகவினர். இவர்களை மேலும் உசுப்பேத்தும் வகையில் சில யூடியூப் சேனல்களும் ’முதலமைச்சராகிறார் விஜய்’ என்று செய்திகள் பரப்பி வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் நிலைமை இப்படி இருந்தாலும் விஜய்க்கு உண்மை நிலவரம் தெரியாமலில்லை. ’வெற்றி நிச்சயம்’ என்று கட்சியினருக்கு விஜய் நம்பிக்கை தந்தாலும் அவர் கைக்கு வந்த பேப்பர் அவருக்கு நம்பிக்கை தரவில்லை.

ஆதவ் அர்ஜூனாவும் தனியாக சர்வே டீம் ஒன்றை வைத்திருக்கிறார். அந்த டீம் மூலமாக உண்மை நிலவரத்தை விஜய் பார்வைக்கு வைத்திருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. அதைக்கண்டு கடுப்பான விஜய், எங்காவது தூரதேசம் சென்று மனதை தேற்றிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.
அதற்காக அவர் ஆஸ்திரேலியா செல்ல ஏற்பாடுகள் செய்திருக்கிறார். மே-4ம் தேதி அன்று மாலையில் ஆஸ்திரேலியா புறப்படுகிறார் விஜய்.
முதலமைச்சராகிறார் என்ற நம்பிக்கை இருந்தால் எதற்காக ரிசல்ட் அன்று ஆஸ்திரேலியா பறக்கிறார் விஜய்? ரிசல்ட் என்னவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டதால்தானே இந்த முடிவை எடுத்திருக்கிறார் விஜய்? என்று கேட்டால், சமாளிக்க முடியாமல் திணறுகிறது பனையூர் வட்டாரம். ’’ஆஸி’க்கு அல்ல, நிலவுக்கு செல்கிறார்’’ என்று கிண்டல் செய்து சமாளிக்கிறார் ஆதவ் அர்ஜூனா.
இந்த நேரத்தில், ‘’விஜய்க்கு தோல்வி பிடிக்காது. அவர் தோல்விப்படங்கள் தரும் இயக்குநர், புரடியூசர்களை திரும்ப பார்க்க மாட்டார். தேர்தலில் தோற்றால் அவர் தோல்வியை தாங்க முடியாமல் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார்’’ என்று விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓ. சொல்லி இருந்ததை நினைவுகூர வேண்டியதாக இருக்கிறது.



