தமிழ்நாட்டை வடமாநிலம் போல் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் தவெகவினர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவு என்பது ஒரு முதிர்ச்சியற்ற முடிவு என்பதே மூத்த அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அதை நிரூபிக்கும் விதத்தில் வாளால் கேக் வெட்டியும், நடு ரோட்டில் ஆட்டை பலி கொடுத்து ரத்த வெள்ளத்தை ஓடவிட்டும் வெற்றிக்கொண்டாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர் தவெகவினர்.

பல இடங்களில், சாலைகளின் நடுவே வெடி வெடித்து, தப்பாட்டம் ஆடி மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து வருகின்றனர் தவெகவினர்.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையில் காரின் வெளியே தொங்கியபடியே விசில் அடித்துக்கொண்டு போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் விஜய்யோ வழக்கம் போலவே கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் மக்களுக்கு வேதனையளிக்கிறது.



