நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் வென்ற நிலையில், அதில் கூட்டணிக்கட்சிகள் தவிர்த்து 47 இடங்களில் அதிமுக தனித்து வென்றது.
இந்த 47 எம்.எல்.ஏக்களில் 17 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நிற்கின்றனர். மீதமுள்ள 30 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர்.

இன்று சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்றக் கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என்று 17 அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
47 எம்.எல்.ஏக்களில் 17 பேர் மட்டுமே எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் 30 எம்.எல்.ஏக்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் பக்கம் நிற்பது அதிமுகவில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீண்டும் அதிமுக உடைகிறதா? என்கிற சதேகத்தை எழுப்பி இருக்கிறது.



