தன்னை தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேற்று நன்றி சொன்னார் முதல்வர் விஜய். அவரது நேற்றைய பேச்சு முழுவதும் பிரச்சார பாணியிலேயே அமைந்தது என்றும், முதல்வர் என்கிற பொறுப்பை உணர்ந்து அவர் பேசவில்லை என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிமுக என்கிற பெயரைக்கூட அவர் நேற்றும் கூட உச்சரிக்கவில்லை. மற்றும் பலர் என்று விமர்சிக்கிறார். தீர்ந்து போன, தீய்ந்து போன கட்சி என்று விமர்சிக்கிறார் விஜய். இதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கடுமையாக கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில்….
‘’இன்னும் கொஞ்சம் ஆதரிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமே என்று நீங்க கூட சொல்லி இருந்தீங் களே.. அதற்கு உங்க போராட்ட களத்தைச் சொல்லுங்க. உங்க தியாகத்தை சொல்லுங்களேன். உங்க உழைப்பை சொல்லுங்களேன். எந்த உழைப்பையும் நீங்க கொடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் எத்தனை பேரிட வந்தது? கஜா புயல், தானே புயல், வர்தா புயல் , சுனாமி , கொரோனா தொற்று என்று எத்தனையோ பேரிடர் வந்தது? அப்போதெல்லாம் விஜய் தம்பி நீங்க எங்கே இருந்தீங்க? மாங்காய் பறிச்சிக்கிட்டு இருந்தீங்களா? என்னப்பா உங்க பேச்சுக்கு ஒரு அளவே இல்லையா?
கொரோனா தொற்று எற்பட்டபோது தமிழ்நாட்டு மக்களை காப்பாற நினைத்து யார்? நீங்க களத்துல இறங்கி தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அரணை ஏற்படுத்திக் கொடுத்தீர்களா? தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைமாக இருக்கும் காவேரி பிரச்சனை, கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு எல்லாம் பெரிய சட்டப்போராட்டம் நடத்தி அந்த உரிமைகளை எல்லாம் மீட்டுக்கொடுத்தீர்களா தம்பி? இல்லை, இளைய சமுதாயத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நீங்க என்ன வழிகாட்டி வைத்திருக்கீங்க தம்பி? , சினிமாவுல நடிச்சு தனி விமானத்துல போகுற அளவுக்கு உங்க குடும்ப வருமானத்தை பெருக்கி இருக்கீங்க. இதுதானே தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க செய்திருக்கிற தியாகம்? என்னப்பா உங்க ஆட்டம் தாங்க முடியலையே. திருச்சியில பார்க்க முடியலையே. உலக அதிசயமாக இருக்குதே.
திருச்சிக்கு நன்றி அறிவிப்பாக வந்தீங்க சரி. திருச்சி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உருப்படியாக ஏதாவது சொன்னீங்களா தம்பி? மேகதாட்டு அணை பற்றி ஏதாவது சொன்னீங்களா? பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதே, சட்டம் ஒழுங்கு சீரழிவாக உள்ளதே, போதைப்பொருள் நடமாட்டம் இருக்குதே, மின்சார தட்டுப்பாட்டு பிரச்சனை உள்ளதே, இதை எல்லாம் 25 நாளில் சீர் செய்ய முடியும் என்று தெரியும். ஆனால் இந்த பிரச்சனைகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றாவது விஜய் தம்பிக்கு தெரியுமா?
தேர்தல் களத்துல பேசுனீங்களே, அதை எல்லாம் நிறைவேற்ற என்ன திட்டம் வச்சிருக்கீங்க தம்பி? எனக்கு அதிகாரத்தை கொடுத்த மக்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன்; என்ன செய்யப்போறேன் என்பதையாவது சொல்ல வேண்டாமா? இன்னும் நடிகராவே இருந்து மக்களிடத்தில் நடித்துக்கொண்டிருந்தால் தம்பி விஜய், நீங்க எப்போது முதல்வராக பொறுப்பேற்கப் போறீங்க?

முதல்வராக வந்துவிட்டோம் என்பதை மறந்து நடிகராகவே இருந்து எல்லோரையும் விமர்சனம் செய்துகிட்டு இருக்கீங்களே.. அதிமுகவை கிள்ளுக்கீரை போலவே நினைக்கிறீங்களே, நேரம்.. உங்க காலம்.. அதிமுகவை அபரிக்க நினைக்கிறீங்க, அதிமுகவை அழைக்க நினைக்கறீங்க, ஆமாம் தம்பி உங்க ஆணவம் தெரியுது தம்பி. அதிமுகவை இன்னும் ஏளனப்படுத்துங்க. இன்னும் அசிங்கப்படுத்துங்க. எங்களை கேவலப்படுத்துங்க. உதாசீனப்படுத்துங்க. அப்போதுதான் அதிமுகவின் சிங்கக்கூட்டம் சிலிர்த்தெழுந்து உங்கள் செதில் செதிலாக உருவாக்குகிற காலத்தை அதிமுக போராடும். ’மற்றும் பலர்’ என்று அதிமுக என்கிற பெயரை உச்சரிக்க மாட்டீங்க. ஏன் என்றால் நீங்க அவதாரப்புருசன். அதிமுக பெயரைச் சொல்லிட்டா, பொதுச்செயலாளசை சந்திச்சிட்டா அவருக்கு விளம்பரம் கிடைச்சிடும் என்று நினைக்கிறீங்க. ஏன் என்றால் நீங்க சினிமா நடிகர்.’’



