அதிமுக பெயரைச் சொல்லிட்டா, பொதுச் செயலாளரை சந்தித்துவிட்டால் அவருக்கு விளம்பரம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறீங்க. ஏன் என்றால் நீங்க சினிமா நடிகர் என்று மாஜி அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ மூலம் குற்றம்சாட்டி இருந்தார்.
தவெக ஆட்சி அமைந்ததும் முதல்வர் விஜய், தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அதிமுகவின் அதிருப்தி அணியினரையும் நேரில் சந்த்த விஜய் எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்திக்கவில்லை.

அதிமுகவின் பிளவுக்கு காரணமே விஜய்தான். அப்படி இருக்கும் போது எடப்பாடியை எப்படி அவர் சந்திப்பார்? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். விஜய் எடப்பாடியை சந்திக்கவில்லை என்றும் உதயகுமாரில் கூறி இருக்கிறார்.
நடந்தது என்ன? என்று அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் கொடுத்தார்.
அவர், ’’அனைத்து தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என்றே முதல்வர் விஜய் விரும்பினார். எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் அப்போது நேரம் கேட்கப்பட்டது. ஆனால், ஒரு சில தலைவர்கள் அப்போதைய சூழ்நிலை கருதி, அதாவது அவர்களுடைய தனிப்பட்ட சூழ்நிலை கருதி இப்போதைக்கு வேண்டாம். நாங்களே தோல்வியுற்று இருக்கிறோம். இந்த நேரத்தில் சந்தித்தால் நன்றாக இருக்காது என்று சொல்லி நேரம் ஒதுக்கவில்லை’’ என்று விளக்கமளித்தார். இந்த விளக்கத்தை பார்த்தால் மாஜி சொன்னது பொய்யா? என்ற சந்தேகம் எழுகிறது.



