நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாகிறது.
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கும் நிலையில் நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ’’என்னுடைய அன்புச்சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதியின் தோல்வி உண்மையிலேயே எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஆனால் அவர் தோல்வியைக் கண்டு துவண்டு போகிறவர் அல்ல.

கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு டெல்லிக்கு அஞ்சாமை என்ற நிலைப்பாட்டில் நின்று, பல வளர்ச்சித்திட்டங்கள், நலத்திட்டங்கள் கொண்டு வந்து இந்திய ஒன்றியத்தில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதற்கு என்னுடைய நன்றியைக் கூறிக்கொண்டு, திராவிட மாடல் அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நான் கடந்த 5 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசுக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் ஆதரவாளனாக இருந்தேன்.
இனி வரும் காலங்களிலும் அதே போல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்னுடைய ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்று பெருமையோடும் , மன உறுதியோடும் மன மகிழ்ச்சியோடும் கூறிக்கொள்கிறேன்’’ என்று பதிவு செய்திருக்கிறார்.



