சினிமாவில் தனது கடைசிப்படம் ஜனநாயகன் என்று அறிவித்திருந்தார் விஜய். தளபதி -69 என்ற பெயரில் அப்படம் எடுக்கப்பட்டு பின்னர் ஜனநாயகன் என்று டைட்டில் வைக்கப்பட்டது. தணிக்கை வாரியத்தில் நடந்த அரசியல் மற்றும் ஈகோ பிரச்சனையால் அப்படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வரவில்லை. போகிற போக்கினை பார்த்தால் வரும் பொங்கலுக்கு கூட அப்படம் திரைக்கு வராது போலிருக்கிறது.
ஜனநாயகன் படம் ஏன் வெளிவரவில்லை? என்று சொல்லுகிற தைரியம் தனக்கில்லை என்றும், அப்படியே தைரியமாக சொன்னால் அதை வெளியிடும் தைரியம் ஊடகங்களிடம் இல்லை என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார் ஜனநாயகன் பட இயக்குநர் எச்.வினோத்.

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் இல்லை என்பது தற்போது தெரியவருகிறது. தளபதி -70க்காக கதை கேட்டு வருகிறார் விஜய்.
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறும் என்பதால் இடைத்தேர்தல் முடிந்ததும் தளபதி -70 படத்தின் படப்பிடிப்பை துவங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் விஜய்.

ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் சட்டம் ஒழுங்கு சீர் ஆகவில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. வாக்குறுதி அளித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் தவெக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் விஜய் நடிக்க கிளம்புவதால் கோட்டையில் இருக்கும் தவெகவினர் கலக்கத்தில் உள்ளனர்.
இது என்னப்பா? என்று அதிகாரிகள் மிரட்டியில் இருக்கிறார்கள்.
இப்போது இருக்கும் நிலைமையை பார்த்து எங்கே செல்லும் இந்தப்பாதை..? என்று தெரிந்து, விஜய் இந்த முடிவெடுத்திருக்கிறாரா? என்று தெரியவில்லை.



