இன்பதுரை வெற்றி செல்லாது என்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் பரப்பு தீர்ப்பை அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தாமதமாக வந்தாலும் நீதி வென்றது என்று மனநிறைவு அடைகிறார் அப்பாவு.
என்ன நடந்தது?
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுவை பின்னுக்குத்தள்ளி அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையின் போதே பல குளறுபடுகள் நடந்ததால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அப்பாவு.

203 தபால் வாக்குகல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதிலும், 19,20,21 சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கையிலும் அப்பாவுக்கு சந்தேகம் வந்தது. முறைகேடு நடந்திருப்பதாக அவர் எண்ணினார். இதனால்தான் மறு வாக்கு எண்ணிக்கை கோரினார். கெஜட் அதிகாரி சான்றளிக்கவில்லை என்று சொல்லி தபால் வாக்குகளை எண்ணாமல் நிராகரித்தது தவறு என்று கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் அப்பாவு கோரிக்கையினை ஏற்று தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது நீதிமன்றம். அதே போன்று 19,20,21 சுற்றுகளின் வாக்குகளையும் மீண்டும் என்ன உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி 19ம் சுற்றுக்கான 14 இயந்திரங்களும், 20 ஆம் சுற்றுக்கான 14 இயந்திரங்கள் 21ம் சுற்றுக்கான 6 இயந்திரங்கள் என்று மொத்தம் 34 வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 34 வாக்குப்பதிவு இயந்திரங்களும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிமன்ற கண்காணிப்பில் எண்ணப்பட்டன.

இதற்கிடையில், மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் இன்பதுரை. ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.
மறு வாக்குப்பதிவு முடிவுகளின் படி நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பின் படி 2016 ல் தேர்தல் ஆணையம் அறிவித்த வெற்றி சட்டப்படி செல்லாது. 104 வாக்கு வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றது நிரூபணம் ஆகி இருக்கிறது.
இதையடுத்து தலைமைச்செயலகம் உள்பட அனைத்து ஆவணங்களில் இருந்து இன்பதுரை பெயர் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பினால் 2016 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ. ஓய்வூதியத்தை இன்பதுரை கேட்க முடியாது , முன்னாள் எம்.எல்.ஏவுக்கான ஓய்வூதியம் , சலுகைகளை இன்பதுரை பெற முடியாது என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
69,541 வாக்குகள் பெற்றிருந்த அப்பாவு 104 வாக்குகள் வென்றதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பட்டிருக்கிறது.
தாமதமாக வந்தாலும் நீதி வென்றது என்கிறார் அப்பாவு.



