• அரசியல்
    அரசியல்Show More
    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    May 29, 2026 at 6:36 pm
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    May 29, 2026 at 6:01 pm
    aadhav arjuna speech
    ஆதவ் அர்ஜுனாவின் தற்குறி பேச்சு – விவசாயிகள் கடும் கண்டனம்
    May 29, 2026 at 1:31 pm
    ammk ttv dinakaran
    சொல்லப்படும் தகவல் உண்மையென்றால் தவெக அரசு எதற்கு? டிடிவி தினகரன் விளாசல்
    May 29, 2026 at 12:22 pm
    modi meet vijay
    7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
    May 28, 2026 at 4:52 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    2026-05-29
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    2026-05-29
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    2026-05-29
    Iran Oil Sanctions
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : அ.தி.மு.க. பொம்மலாட்டம்
Share
31°C
Chennai
scattered clouds
31° _ 30°
66%
4 km/h
Mon
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : அ.தி.மு.க. பொம்மலாட்டம்

Spark Web Desk
Last updated: 2025-09-10 6:53 am
Spark Web Desk Spark Web Desk 62 Views
Share
senkottaiyan edappadi palanisamy
SHARE

அ.தி.மு.க.வில் கலகக் கொடி தூக்கிய செங்கோட்டையனிடம் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. கட்சியிலிருந்து நீக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கட்சியைப் பொறுத்தவரை செங்கோட்டையன் சீனியர். 1991ல் ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சி அமைத்தபோதே அமைச்சராக இருந்தவர். ஈரோடு மாவட்டத்தில் தனக்கென செல்வாக்கைக் கொண்டவர். தன் அரசியல் வாழ்வில் ஒரு முறை தவிர, கோபி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர். அதே ஈரோடு மாவட்டம்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பூர்வீகம். அவரது சொந்தக்காரர்கள் அங்கே இருக்கிறார்கள். அவரது சொந்தக்காரர்கள் செங்கோட்டையனுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பார்கள். இதில்தான் உள்அரசியல் அடங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் அவருடைய சுற்றுப்பயணத்தை திட்டமிடுபவராகவும் இருந்தவர் செங்கோட்டையன். பிறகு அந்த நம்பிக்கை தகர்ந்துபோகிறது. செங்கோட்டையன் மீது கட்சிக்குள்ளும் ஆட்சிநிர்வாகத்திலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. காய்களை மாற்றுவது அரசியல் சதுரங்கத்தில் சர்வசாதாரணமானது. செங்கோட்டையனுக்குப் பதில் அவரது சமூகத்தைச் சேர்ந்தவரான எடப்பாடி பழனிசாமிக்கு போயஸ் தோட்டத்தில் முக்கியத்துவம் கிடைக்கிறது. அதற்கு காரணமானவர் சசிகலா.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்தபோது செங்கோட்டையன் செல்வாக்கு குறைந்திருந்தார். சசிகலா தயவில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். அதுவரை அந்தப் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து தர்மயுத்தம் நடத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே உதறித்தள்ளிவிட்டு அதிகாரத்தை அனுபவிக்கும் பக்கா அரசியல்வாதி என்பதை நிரூபித்தார். கட்சிக்கு பொதுச்செயலாளராகவும் ஆகிவிட்டார்.

பழனிசாமியின் அதிகார அரசியலால் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., கே.சி.பழனிசாமி என அ.தி.மு.க.வின் நேரடி-மறைமுக புள்ளிகள் கட்சிக்குள் செல்வாக்கை இழந்து தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டிய நிலை உருவானது. அ.தி.மு.க.வை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பா.ஜ.க, எடப்பாடி பழனிசாமியை கூட்டணித் தலைவர் என்று சொல்லிக்கொண்டே அவருடைய பலத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை கட்சிதமாக மேற்கொண்டு வருகிறது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையன், பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மூவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனித்து நின்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை வைத்த விமர்சனங்கள் படுகாத்திரமானவை. தற்போது அ.தி.முக.-பா.ஜ.க ஒரே கூட்டணியில் உள்ள நிலையில், அண்மைக்காலமாக அண்ணாமலை  அடக்கி வாசிப்பதும், அவரது சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க சீனியர் செங்கோட்டையன், அதே சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், அந்தக் குரலை ஆதரித்து, ஏற்கனவே எடப்பாடியால் ஓரங்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் (இவர்கள் மூவரும் ஒரு சமூகத்தினர்) பேசுவதும் அவர்கள் நீண்டநாட்களாக காத்திருந்த சூழலுக்கான வாய்ப்பு கிடைத்திருப்பதையே காட்டுகிறது.

அரசியலைப் பொறுத்தவரை சீனியர்-ஜூனியர் என்பதெல்லாம் கிடையாது. வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் வெற்றி-தோல்வி உள்ளது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்தலைவரான கலைஞர் கருணாநிதி மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது,  பட்ஜெட்டை தாக்கல் செய்யவிடாமல் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. கலவரம் செய்தபோது, அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் செல்வி ஜெயலலிதா சொன்னதை செய்வதற்காக, முதலமைச்சர் மீது பாய்ந்து தாக்கி, அவரது கருப்புக்கண்ணாடியைத் தட்டிவிட்டவர்தான் செங்கோட்டையன். அவருடைய அரசியல் பாதையில் இதுபோன்ற தலைமைக்கான எடுபிடி-அடியாள் வேலைகளும், சொந்தத் தொகுதியில் உள்ள சமூக ஆதரவை ஒருங்கிணைப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளும்தான் நிறைந்துள்ளனவே தவிர, அமைச்சர் பதவியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் நிறைவேற்றவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அப்போதுதான், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் கருத்துக்கு தலையாட்டி, +1 வகுப்பிலும் பொதுத்தேர்வு என்பதைக் கொண்டு வந்தார். மாணவர்களின் மன அழுத்தம் கருதி தற்போதைய அரசில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. துறை சார்ந்த பொறுப்போ, மக்கள் நலன் சார்ந்த பார்வையோ செங்கோட்டையனிடம் கிடையாது. தலைமையிடம் நல்ல பிள்ளை போல நடந்தகொண்டு கட்சிப்பதவி-மந்திரிப் பதவி ஆகியவற்றைக் காப்பாற்றிக் கொள்ளும் அரசியலை செய்தார் சீனியர் செங்கோட்டையன். அவருக்கு ஜூனியரான எடப்பாடி பழனிசாமி அதே அரசியல் பாணியைத்தான் செய்தார்.

வாய்ப்பு கிடைத்தபோது கட்சித் தலைமையையே தூக்கிப் போட்டுவிட்டு, தன் தலைமையில் கட்சியைக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டு அரசியல் வியாபாரிகளையும் தன் கண்ட்ரோலில் வைத்து பொம்மலாட்டம் ஆடுகிறது பா.ஜ.க. தலைமை.

TAGGED:ADMKBJPepssengottaiyantamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article o pannerselvam senkottaiyan காலக்கெடு முடிந்ததும் செங்கோட்டையனை சந்திப்பேன் – ஓபிஎஸ்
Next Article vijay tvk கேசிபி சொல்லும் அந்த நரி யார்?அதிமுக மூலமாக விஜய்யை முதல்வராக்க முயற்சியா?

உலகம்

Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

c vijayabaskar
இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
May 29, 2026 at 6:36 pm
poongundran sankaralingam
தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
May 29, 2026 at 6:01 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?