மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு மற்றும் இரண்டு ரஷ்யப் பெண்களுடனான ரகசிய உறவுகள் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.

தனது அறக்கட்டளை ஊழியர்களுடனான சந்திப்பில், மிலா அந்தோனோவா என்ற ரஷ்ய பிரிட்ஜ் விளையாட்டு வீராங்கனை மற்றும் மற்றொரு ரஷ்ய அணு இயற்பியல் நிபுணர் ஆகியோருடன் தனக்குத் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். இந்த விவகாரங்களைப் பயன்படுத்தி 2017-ம் ஆண்டு ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை மிரட்ட முயன்றதாகவும், அவரோடு பழகியது தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடர்புகள் காரணமாக தனது அறக்கட்டளையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதற்காக ஊழியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ், அதே சமயம் எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல்களில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை மறுத்துள்ளார். குறிப்பாக, இந்த உறவுகளால் தனக்கு பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று அவர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா தம்பதியினர் விவாகரத்து செய்தபோது, எப்ஸ்டீனுடனான கேட்ஸின் நட்பும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டது. தற்போது இந்த ஒப்புதல் மூலம், நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். (Online Tamil News)


