போட்டோ சர்ச்சையால், த்ரிஷா என்ன மதர் தெரசாவா? வேலு நாச்சியாரா? என்று வெகுண்டெழுந்திருக்கிறார் பார்த்திபன்.
சங்கீதா விவாகரத்து கேட்டிருக்கும் நேரத்தில், விஜய் – த்ரிஷா இருவரும் பொதுவெளியில் ஜோடியாக வலம் வந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நேரத்தில் இது தேவையா? என்று பலரும் கேள்வி எழுப்பும் சூழலில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பார்த்திபனிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலுக்கு த்ரிஷா கண்டனம் தெரிவிக்க பார்த்திபன் உடனே அது விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ’’சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி அரங்கேறிவிடுகின்றன. கலாட்டா விருது விழாவில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் டான் டான் என்று பதில் சொல்லிக் கொண்டிருக்கையில், த்ரிஷாவின் போட்டோ திரையில் வந்ததும், என்ன சொல்வது என யோசிக்கையில், குந்தவை குந்தவை என குரல் எழுப்பினர். உடனே வார்த்தை ஜாலமாக மட்டுமே, ’’குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்கவும். பிரச்சனை வராமல் இருக்க. எனக்கூற அரங்கமே கை தட்டியது. அதில் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள்.
மேடையை விட்டு இறங்கி வந்ததும் நண்பர் ரங்கராஜ் பாண்டே, குந்தவையை தவிர்த்திருக்கலாம் என்று சொன்னார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் அதை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் யாரோ எடுத்த வீடியோ மூலம் அது வெளியாகி சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்காக நானும் என் வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்சனைகள் பெரிதாவதை என்றுமே நான் விரும்புவதில்லை.

நான் கல்லூரிகளுக்கு செல்லும் போது கூட பெண் சுதந்திரம் பற்றியே பேசுகிறேன். ஆண்- பெண் பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திரத்தை கைபிடித்து சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைப்பவன் நான். பெண்ணே இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் ஆக்கசக்தி. ’’ என்று பேசியிருந்தார்.
வீடியோவுடன், ‘’எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில், வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை !’’இந்த வாசகங்களையும் குறிப்பிட்டிருந்தார்.
வார்த்தை ஜாலத்தால் அப்படி சொல்லிவிட்டேன். தவ றுக்கு வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டார் பார்த்திபன். ஆனால், த்ரிஷாவோ, திட்டமிட்டே பார்த்திபன் , தன் போட்டோவை போடச்சொல்லி அப்படி பேசினார். பார்த்திபன் பேசியது முட்டாள் தனம் என்று ஆத்திரப்பட, கடுப்பான பார்த்திபன், மகளிர் தினத்தன்று திட்டமிட்டே பேசுவதற்கு த்ரிஷா ஒன்றும் மதர் தெரசா அல்ல, வேலு நாச்சியார் அல்ல, டயானா அல்ல என்று வெடித்திருக்கிறார்.

’’அந்த நிகழ்ச்சியில் நான் தவறு செய்துவிட்டதாக உணர்கிறேன். உண்மையிலேயே அது தவறித்தான் நடந்தது. த்ரிஷா போட்டோவை போடச்சொல்லி நான் சொன்னதாக த்ரிஷா சொல்வது 100% பொய். மகளிர் தினத்தன்று நான் போட்டோ போடச் சொன்னால் வேலு நாச்சியாரைப் பற்றி பேச ஆசைப்பட்டிருப்பேன். டயானா சார்லஸ் பற்றி பேச ஆசைப்பட்டிருப்பேன். நான் எப்போதுமே பேசுற மதர் தெரசா பற்றி பேச மறுபடியும் ஆசைப்பட்டிருப்பேன். ஆனால், த்ரிஷா பற்றி நான் பேச ஆசைப்பட்டேன் என்று சொல்லுவது சரியல்ல’’என்கிறார் பார்த்திபன்.



