நான் வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதை விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு, ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்தால் கேலிக்குரியதாகிவிடும் என்று நினைத்துதான் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்யும் திட்டத்தை ரத்து செய்தார் விஜய்.
முதலிரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் செல்வதில் பல்வேறு சிக்கல் இருப்பதை உணர்ந்து ஹெலிகாப்டரில் சென்று யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் குறித்த நேரத்தில் சென்று பிரச்சாரம் செய்துவிடலாம் என்றுதான் நினைத்திருக்கிறார் விஜய்.

உச்சத்தை விட்டுவிட்டு, வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு, அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக வந்திருக்கிறேன் என்று சொல்வது எல்லாம் பொய்யாகிவிடும் என்பதால் அந்த திட்டத்தை ரத்து செய்திருந்தார் விஜய்.
காரில் செல்வதால் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பிரச்சாரத்தில் பேச முடியாமல் போவதால் வரும் 19ம் தேதி அன்று கடலூர் பிரசாரத்திற்கு நீலாங்கரையில் இருந்து கடலூருக்கு காரில் செல்லாமல் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறார் விஜய்.

வருகின்ற 19 ஆம் தேதி கடலூருக்கு ஹெலிகாப்டரில் சென்று விஜய் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
கடலூரில் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் 9 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பரப்புரை செய்ய திட்டமிட்டிருப்பதால் இந்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.



