சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் பயணிகள் மொபைல் போன்களில் சத்தமாக பேசுதல், ஸ்பீக்கர் மோடு பயன்படுத்துதல் மற்றும் ஹெட்போன் இல்லாமல் பாடல்கள் அல்லது வீடியோக்களை கேட்பது போன்ற செயல்கள் அதிகரித்து, மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதாக பல புகார்கள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு ₹500 வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், விதிமுறைகளை மீறி தொடர்ந்து பிற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, அவசியமெனில் அவர்களை மெட்ரோ வளாகத்திலிருந்து வெளியேற்றவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை Metro Rail Act, 2002ன் விதிமுறைகளின் கீழ் அமல்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் ஹெட்போன் பயன்படுத்தி, மெதுவாக பேசி, மற்றவர்களின் அமைதியை மதித்து பயணம் செய்ய வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.(Online Tamil News)


