அனுமதி கிடைத்தும் அதிக இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை தவெக தலைவர் விஜய். தங்கள் கட்சியின், கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் சூறாவளி பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேரித்தனர் தலைவர்கள். ஆனால் விஜய்யோ தனது கட்சியின் குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்கும் மட்டும் பிரச்சாரம் செய்துள்ளார்.
விஜய் பிரச்சாரத்திற்கு வராததால் பிரச்சார வேனில் அவரது கட் – அவுட் வைத்து சில தவெக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். கும்பகோணம் தவெக வேட்பாளர் Hologram தொழில்நுட்ப உதவியுடன் விஜய்யை நிழல் பிரச்சாரம் செய்ய வைத்தார். பிரச்சார விஜய் ஒளியும் ஒலியும் காட்டினார். இதை பலரும் கிண்டல் செய்தாலும் அவருக்கு வேறு வழியில்லை. அவர்தான் என்ன செய்வார்? என்று பலரும் அவருக்காக பரிதாபப்பட்டனர்.

மக்கள் சந்திப்பு, பிரச்சாரம் செய்ய கரூர் சம்பவத்திற்கு பின்னர் அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கூறி வந்தனர் தவெகவினர். உண்மை என்னவென்றால் அனுமதி கிடைத்தும் பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்து விட்டார் விஜய். ஏன் என்று கேட்போரிடம், கடைசி நேரத்தில் அனுமதி தந்ததால் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டோம் என்றார். இரவு 8 மணி வரைக்கும் அனுமதி தந்தால் சாலைவலத்தை மாலை 6 மணிக்கே நிறுத்தி விட்டார் விஜய்.
ஆறு மணிக்கு மேல் ஏன் ஆட்டோ ஓடாது? என்று விமர்சனம் எழுந்ததும், கரூர் சம்பவம் இரவில் நடந்தது. அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்கிற முன் எச்சரிக்கையினால்தான் விஜய் இரவு பிரச்சாரங்களை தவிர்த்தார் என்றார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இப்படிச் சொன்னாலும், சொகுசு பேர்வழி விஜய்யினால் அதிக நேரம் நிற்க முடியாது. அதனால்தான் பாதியில் நிறுத்தி விடுகிறார் என்கிறார்கள் அவருடன் பழகிய பலரும்.

பனையூர் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல் வேறு விதமாக இருக்கிறது. சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லி சென்றபோது, அங்கே அமித்ஷா தரப்பினருடன் ரகசிய சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்த சந்திப்பில், தவெக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டால் அதிமுக அதிக அளவில் வாக்குகளை இழக்க வேண்டியது வரும். அது திமுகவின் வெற்றிக்கு சாதகமாகிவிடும் என்பதை உணர்ந்த அமித்ஷா, தவெகவின் பிரச்சாரத்தை மந்தமாக்கச் சொல்லி இருக்கிறார். சொல்லி இருக்கிறார் என்று சொல்வதை விட உத்தரவிட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். முன்னதாக மும்பையில் த்ரிஷாவை சந்தித்த ஆர்.எஸ்.பிரமுகர்களும், அமித்ஷா தரப்பினரும் இதையே சொல்லி இருக்கிறார்கள்.

அமித்ஷா போட்ட இந்த உத்தரவுக்கு பின்னர்தான் வேறு வழியில்லாமல் வேண்டுமென்றே பிரச்சாரப் பயணங்களை ரத்து செய்துவிட்டு திமுக மீது பழி போட்டு வந்தார் விஜய் என்கிறது பனையூர் வட்டாரத்தில் இருந்து வரும் அந்த தகவல்.



