தமிழகம் முழுவதும் பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் செல்லலாம், மகளிர் உரிமை தொகை 2,500 ரூபாய், காவலர்களுக்கு சம்பள உயர்வு, அண்ணன் சீர் திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர், காவலர்களுக்கு சம்பள உயர்வு என்று ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வராகும் விஜய் இதை எல்லாம் எப்படி நிறைவேற்றுவார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் திராவிட கழக தலைவர் கி.வீரமணி.

’’போதுமான பெரும்பான்மை பெறாத ஓர் ஆட்சியைத் தான், தமிழ்நாட்டு வாக்காளர்கள் நாளை முதலமைச்சராகப் பொறுப்பேற்கக் கூடிய த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய்க்குத் தந்துள்ளனர்!
அந்தப் பிரச்சினையோடு, அவர் அளித்திட்ட பல்வேறு வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றிக் காட்ட வேண்டியது முக்கிய ‘ஜனநாயகன்’ கடமை. அதை எப்படி ஆற்றுவார் என்பது அவர்முன் உள்ள ‘மில்லியன் டாலர் கேள்வியாகும்!’’



