தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க பல கட்சிகளின் தயவை நாடி இருந்த போது அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணி திரண்டது. அந்த அணி தவெகவுக்கு ஆதரவளிக்க முன்வந்தது.
தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கலாம் என்கிற நோக்கத்துடன் அந்த அணி அதற்கான முன்னெடுப்புகளில் இருந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார் எடப்பாடி.

இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் எழுந்தது. தொடர் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்ற முழக்கங்கள் எடப்பாடியை ஆட்டம் காண வைத்தது. நேருக்கு நேராக எடப்பாடியை விளாசி எடுத்தார் சி.வி.சண்முகம்.
கடந்த சனிக்கிழமை அன்று தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று எஸ்.பி.வேலுமணி தலைமையில் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறது அந்த அணி.
தவெக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் பதவி வாங்கிக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்று 33அதிமுக எம்.எல்.ஏக்கள் வேலுமணி தலைமையில் முயன்று வருகின்றனர்.



