• அரசியல்
    அரசியல்Show More
    cm vijay
    93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
    May 15, 2026 at 6:53 pm
    leema
    அதிமுகவின் பிளவுக்கு லீமா ரோஸ் காரணமா?
    May 15, 2026 at 6:18 pm
    mk stalin speech
    யாரையும் குறை சொல்லாதீங்க… – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
    May 14, 2026 at 1:32 pm
    ammk ttv dinakaran
    தவெகவின் அசிங்க அரசியல் தொடரக்கூடாது  – தினகரன் ஆவேசம்
    May 14, 2026 at 12:06 pm
    news j
    மீண்டும் அதிகாரப்பூர்வ  நாளிதழ், ஊடகத்தை பறிகொடுத்த அதிமுக!
    May 14, 2026 at 11:47 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    cm vijay
    93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
    2026-05-15
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    2026-05-15
    leema
    அதிமுகவின் பிளவுக்கு லீமா ரோஸ் காரணமா?
    2026-05-15
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
  • இந்தியா
    இந்தியாShow More
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
  • உலகம்
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    Thailand-Cambodia-Conflict-Preah Vihear-Ta Muen Thom-War-Emerald Triangle
    உலகம்
    தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல்: கோயில் சர்ச்சையிலிருந்து போர் பதற்றம் வரை
    2025-12-23
    New-reed-snake-specie-founded-sceintists-sciencenews-technology
    உலகம்
    15 வருடங்களுக்கு அறியப்பட்ட பாம்பின் இனம்!
    2026-01-14
    India global GDP growth 2026-Online Tamil News
    உலகம்
    உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை – எலான் மஸ்க் !
    2026-02-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம்: ஜனநாயகத்தை சீரழிக்கும் பா.ஜ.க.
Share
30°C
Chennai
mist
30° _ 29°
82%
3 km/h
Sun
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: ஜனநாயகத்தை சீரழிக்கும் பா.ஜ.க.

Last updated: 2026-03-17 10:12 am
Spark Desk 114 Views
Share
BJP democracy criticism,
SHARE


நாடாளுமன்ற மக்களவை (லோக்சபா) சபாநாயகர் ஓம்பிர்லா மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையும் என்பது எல்லாருக்கும் தெரியும். மக்களவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், அதன் ஆதரவு உறுப்பினர்களுக்கும் உள்ள பலத்தைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலம் குறைவுதான். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி, சபாநாயகர் பாரபட்சமில்லாத தலைமைப் பண்புடன் அவையை நடத்துவதாகப் பாராட்டியிருக்கிறார். இந்தப் பாராட்டு உண்மையல்ல என்பது மோடிக்கே தெரியும். ஒருவேளை, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிகம் கலந்துகொள்ளாத பிரதமர் மோடி, உண்மையை அறியாதவராக இருந்தாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் பா.ஜ.க.வின் எம்.பிக்கள் வரை அத்தனை பேரும் அறிந்திருப்பார்கள்.

modi



பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஒரு புத்தகத்தின் சில வரிகளைப் படித்தார். உடனே ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அமளி துமளி. சபாநாயகரும் அந்தப் புத்தக வரிகளை எதிர்க்கட்சித் தலைவர் படிப்பதற்கு அனுமதி கொடுக்க மறுத்தார். இந்திய-சீன எல்லை நிலவரம் பற்றி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி எழுதிய புத்தகம் அது. மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எல்லைப் பிரச்சினைகளில் எப்படி செயல்படுகிறது-உண்மை நிலவரம் என்ன என்பதை அதில் அந்த அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தான் அதனைப் படிக்க அனுமதிக்கவில்லை.

முதல் நாளும் சபாநாயகரின் அனுமதி கிடைக்கவில்லை. இரண்டாவது நாளும் அனுமதி கொடுக்கப்படவில்லை. அந்தப் புத்தக வரிகள் படிக்கப்படக்கூடாது என்கிற பா.ஜ.க.வின் நோக்கத்திற்கேற்ப சபாநாயகரின் நடவடிக்கை இருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் உரிமைக் குரலை எழுப்பிய நேரத்தில், புத்தகத்தைப் பதிப்பித்த நிறுவனம் இன்னும் அந்தப் புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்று அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, ராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் ஓய்வுக்குப் பிறகு புத்தகம் எழுதுவதற்கு புதிய நிபந்தனைகளை விதிக்கின்ற வகையில் ஒரு குழுவை அமைக்க பா.ஜ.க. அரசு முடிவு செய்தது.

சபாநாயகர் இருக்கையில் ஓம்பிர்லா இருந்தாலும், மாற்று சபாநாயகர்களாக உள்ள பா.ஜ.க. எம்.பி.க்கள் இருந்தாலும் இதே வகையான அணுகுமுறைதான். எதிர்க்கட்சியினர் பேசுவதற்கே அனுமதி கிடையாது. மணிப்பூர் விவகாரமா? பேசமுடியாது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலால் சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோல் பொருட்கள் தட்டுப்பாட்டால் இந்திய மக்கள் பாதிக்கப்படுகிறார்களா? பேச முடியாது. எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரமா? பேசவே முடியாது. தமிழ்நாட்டில் இயற்கைப் பேரிடருக்கு நிவாரண உதவி கேட்டு பேசலாமா? அனுமதி கிடைக்காது. கிடைத்தாலும் நேரம் குறைவுதான். இதுதான் பா.ஜ.க ஆட்சியின் நாடாளுமன்ற ஜனநாயகம். இந்த லட்சணத்தில்தான், சபாநாயகர் ஓம்பிர்லா பாரபட்சமில்லாமல் செயல்படுகிறார் என்று பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். சபாநாயகர் மனசாட்சியே கூசியிருக்கும். ஏனென்றால், ஆளுங்கட்சியினரான பா.ஜ.க தரப்பினர் பேசும்போது ஓம்பிர்லா அவர்களின் முகபாவனை எப்படி இருக்கும், எதிர்க்கட்சியினர் பேசும்போது எப்படி இருக்கும் என்கிற வேறுபாடுகள் சமூக வலைத்தளங்கள் வரை பரவியிருக்கின்றன.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அடிப்படை, 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்குமான வாக்களிக்கும் உரிமை. அதனை செயல்படுத்த வேண்டியது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். அதன் தலைவரான ஞானேஷ்குமாரை நீக்கக் கோரும் தீர்மானத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் முன்னெடுப்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கையெழுத்து இயக்கம் நடத்தி, பல கட்சிகளை அதில் இணைத்து, மக்களவை-மாநிலங்களவை இரண்டிலும் இதற்கானத் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் முனைப்பு காட்டியுள்ளன. எண்ணிக்கை அடிப்படையில் இந்தத் தீர்மானம் வெற்றி பெறுமா என்றால் சாத்தியமில்லைதான். எனினும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பே எதிர்ப்புக் குரலின் தன்மைதான்.

WDhhoTik


75 ஆண்டுகளைக் கடந்த இந்தியக் குடியரசில் பல சபாநாயகர்களும் தலைமைத் தேர்தல் கமிஷனர்களும் இருந்திருக்கின்றனர். இரு பதவிகளுமே ஆளுங்கட்சியின் ஆதரவில் அல்லது பரிந்துரையில் அமைவதுதான். ஆனால், இதற்கு முன் எந்த சபாநாயகரையும் நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கோரியதில்லை. நேரு, இந்திரா, ராஜீவ், மன்மோகன் சிங் என காங்கிரஸ் ஆட்சிக்கால சபாநாயகர்கள், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜக. ஆட்சியின் சபாநாயகர்கள், கூட்டணி அரசுகளின் சபாநாயகர்கள் எல்லாருமே ஆளுந்தரப்பின் ஆதரவில் வந்தவர்கள்தான். ஆனால், எதிர்க்கட்சிகள் எதுவும் சபாநாயகரை நீக்கச் சொல்லவில்லை. அரசியல் கட்சிகளின் எண்ணங்களுக்கு மாறாக பல தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கொண்ட தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷனையும் எந்தக் கட்சியும் நீக்கச் சொல்லவில்லை.

மோடியின் பா.ஜ.க. ஆட்சியில்தான் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் தலைவராக இருந்த முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர், தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் என ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைப்புகளின் தலைவர்கள் நீக்கப்பட வேண்டும் என்ற எல்லைக்கு எதிர்க்கட்சிகள் செல்லவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு 12 ஆண்டுகால மோடி ஆட்சி இந்திய ஜனநாயகத்தை சீரழித்துள்ளது.(Online Tamil News)

TAGGED:BJP GovernmentDemocratic InstitutionsElection CommissionIndiaIndian PoliticsLok SabhaNarendra Modiom birlaonline tamil newsOpposition PartiesParliamentary Democracytamil news today
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Daily Horoscope 17 March 2026 இன்றைய ராசிப்பலன் – 17.03.2026
Next Article Rajinikanth response ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் அதிரடி பதிலடி!

உலகம்

Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

cm vijay
93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
May 15, 2026 at 6:53 pm
Dewas firecracker explosion
மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
May 15, 2026 at 6:22 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?