ஜனநாயகன் லீக் குறித்து விஜய்யிடம் 27 வருடங்கள் பி.ஆர்.ஓ. ஆக இருந்த பிடி செல்வகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ‘’விஜய்யின் படங்களை பொறுத்தவரையிலும் விஜய்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார். அவரை மீறி ஒன்றும் செய்துவிட முடியாது. தயாரிப்பில் இருந்து எடிட்டர் வரையிலும் எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொள்கிறார். ஒரு படத்தின் மொத்த கண்ட்ரோலும் விஜய்யிடம் தான் இருக்கும். அப்படி இருக்கும்போது வேறு ஒருவர் ஜனநாயகன் படத்தை வெளியிட வாய்ப்பில்லை.

தேர்தல் நேரத்தில் மக்கள் அனுதாபம் பெற , ஒரு அனுதாப அலையை உருவாக்கலாம் என்று திட்டமிட்டுதான் விஜய்தான் இந்த காரியத்தை செய்திருக்கிறார். பொருள் அவர்கள் கையில்தானே இருந்தது? அது எப்படி லீக் ஆகும்?
தணிக்கை வாரியத்தின் கையில் ஒரு காப்பி இருக்குது. ஆனால் தணிக்கை வாரியம் இது மாதிரியான செயலை செய்யாது.

திட்டமிட்டு செய்துவிட்டு அனுதாப அலை தேடுவது சரியான அரசியல் அல்ல. விஜய் இதை செய்யக்கூடாது’’ என்றார்.



