ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் இடையே காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஜாக்குலினும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு அமலாக்கத்துறையினரால் விசாரணை வளையத்தில் இருந்து வருகிறார்.

தற்போது இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாக, ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது காதலன் சுகேஷுக்கு எதிராக அரசு தரப்பு சாட்சியாக (Approver) மாற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு தரப்பு சாட்சியாக அவர் மாறும்பட்சத்தில், சுகேஷ் சந்திரசேகர் செய்த மோசடிகள் மற்றும் அவருடனான பணப் பரிமாற்றங்கள் குறித்த ரகசியத் தகவல்களை நீதிமன்றத்தில் ஜாக்குலின் வாக்குமூலமாக அளிப்பார். இது சிறையில் இருக்கும் சுகேஷுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


