ஆஸ்த்தான ஜோதிடர் சொன்னபடிதான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிறார் விஜய். பெரம்பூர் தொகுதியில் விஜய் கோலம் போட்டதும் அந்த ஜோதிடர் சொன்ன ஆலோசனைதான்.
கோலம் போடுவது ஒன்று விஜய்க்கு புதிதல்ல. அனுதினமும் சூரியன் உதயமாகும் நேரத்தில் சில வகை கோலங்களை போட்டு வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்று ஜோதிடர் சொன்ன ஆலோசனையின்படி தனது வீட்டில் சூரிய உதயத்தில் அந்த மூன்று கோலங்களையும் போடுவதற்காகவே மூன்று பெண்களை நியமித்திருக்கிறார் விஜய்.

அதே மாதிரி தவெகவினர் தங்கள் வீட்டு வாசலிலும் கோலம் போட வேண்டும் என்று ஜோதிடர் சொன்ன ஆலோசனையை ஏற்று தவெகவினருக்கு விஜய் வேண்டுகோள் வைத்தார். அந்த வேண்டுகோளை ஏற்று தவெகவினர் தங்கள் வீட்டு வாசலில் தவெகவின் விசில் சின்னத்தை கோலமிட்டு வருகின்றனர். குறிப்பாக விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தவெகவினர் அதிகம் கோலமிட்டனர்.

அதிலும் தவெக பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தின் வாசலில் விசில் சின்னம் கோலமிட்டனர் பெண்கள். அவர்களுடன் இணைந்து விஜய்யும் கோலம் போட்டார்.

பெரம்பூர் தொகுதியில் உள்ள சில வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரித்த விஜய், தவெக தேர்தல் அலுவலகத்தில் அப்பகுதியினருடன் ஆலோசனை நடத்தினார் விஜய்.



