திமுக கூட்டணியில் இருந்து திமுகவினரின் தயவுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, தனது சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை தவெகவுக்கு தாரை வார்த்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் அதிமுக சந்திக்கப்போகும் அபாயம் குறித்து விளக்குகிறார் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி.
’’அதிமுக வெளியில் இருந்து தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதற்கான சமிக்கைகள் தெரிகிறது. இதே போலத்தான் டெல்லியில் ஆம் ஆத்மி முதல் முறை வென்ற போது தனி மெஜாரிட்டி பெறவில்லை. அன்றைக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆம் ஆத்மிக்கு ஆதரவு கொடுத்தது. எதிர்காலத்தில் களம் ஆம் ஆத்மி Vs பாஜக என்று அமைந்து டெல்லியில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டது.

அரசியல் அரிச்சுவடி தெரியாமல், பணம் பதவி இரண்டு மட்டுமே அரசியல் என்று நினைக்கிற தற்குறி பழனிசாமி ஆட்சியினுடைய பலன்களை பெற வேண்டும் என்பதற்காக தவெக ஆதரிப்பதாக எடுக்கும் முடிவு களத்தை தவெக vs திமுக என்று பலப்படுத்தி அதிமுகவின் அடையாளத்தை இலக்கச் செய்து அரித்து எடுத்து விடும்.
ஆனால் அதிமுகவிலும் தவெகவிலும் கோலோச்சுகிற கள்ள லாட்டரி குடும்பத்தை வைத்து பேச்சு வார்த்தைகளை நடத்தி இப்படி ஒரு துர்பாக்கியமான முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுக்கிறார்.

அதிமுக தொண்டர்களும் உண்மையான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா விசுவாசிகளும் ஒருங்கிணைந்து தலைமை மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், இந்த அரசியல் வியாபாரி அதிமுகவை மொத்தமாக விற்று அழித்துவிடுவார். ’’



