தமிழக அரசியல் களம் இதுவரை சந்தித்திராத ஒன்று. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற நிலையில் விஜய்யிடம் 108 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவுக்கரம் நீட்டி இருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் தேவை இருக்கிறது. இதற்காக அதிமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தவெக.
இதற்குள் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகரை சந்தித்து உரிமை கோரியிருக்கிறார் விஜய்.

இந்த சந்திப்பில், சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு இரண்டு நாள் காலக்கெடு விதித்திருக்கிறார் ஆளுநர். இது விஜய்க்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்திருக்கிறது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் ஜானகிக்கு 30 நாட்கள் எல்லாம் காலக்கெடு கொடுத்திருந்தனர். ஆனால் விஜய்க்கு 2 நாள் தான் காலக்கெடு அளித்திருக்கிறார் ஆளுநர்.
ஆளுநர் அதிக நாட்கள் கொடுப்பார் என்று விஜய் எதிர்பார்த்திருந்திருக்கிறார். ஆனால் இரண்டு நாளில் ஆதரவு திரட்ட வேண்டும் என்பதால் கடும் நெருக்கடியில் உள்ளார் விஜய்.



